Toxic: ஒரு ஹீரோவுக்கு எத்தனை ஹீரோயின்ப்பா.. மெல்லிசாவாக மாறிய காந்தாரா கனகவதி.. பாவம் நயன்தாரா!

பெங்களூர்: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் ஒன்றுக்கு 3 ஹீரோக்கள் தான் நடித்துள்ளனர். ஆனால், கன்னடத்தில் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் ஏகப்பட்ட ஹீரோயின்கள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்த ரசிகர்கள் யாரை பார்ப்பது, யாரை விடுவது என்றே தெரியலையே பாஸ் என ஃபயர் விட்டு வருகின்றனர்.

கேவிஎன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தில் பூஹா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பிரியாமணி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், அதே கேவிஎன் தயாரிப்பில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் மொத்தம் 6 ஹீரோயின்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rukmini Vasanth s Mellisa character poster from Yash s Toxic movie out now Totally 6 Heroines
Photo Credit:

சமீபத்தில் மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான களம் காவல் படத்தில் 22 நடிகைகள் ஏமாளி பெண்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நான் அவனில்லை, பஹீரா உள்ளிட்ட படங்களிலும் ஏகப்பட்ட நடிகைகள் நடித்துள்ளனர்.

மெல்லிசாவாக ருக்மணி வசந்த்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'டாக்ஸிக்' படத்தில் மெல்லிசா கதாபாத்திரத்தில் நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் கூட அதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இந்நிலையில், தற்போது மெல்லிசா கதாபாத்திரத்தில் ருக்மணி நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை யஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காந்தாரா வில்லி: கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய 2வது படமாக மாறிய காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1 படத்தில் கனகவதி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி கிளைமேக்ஸில் வில்லியாக நடித்து மிரட்டிய ருக்மணி வசந்துக்கு அடுத்த மெகா கன்னட பட வாய்ப்பாக டாக்ஸிக் படம் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

6 ஹீரோயின்கள்: வாழ்ந்தால் யஷ் போலத்தான் வாழ வேண்டும் என ரசிகர்கள் பொறாமைப்படும் அளவுக்கு டாக்ஸிக் படத்தில் 6 ஹீரோயின்களை அவரை சுற்றி நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் கீது மோகன்தாஸ். ஏற்கனவே ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, நயன்தாரா , தாரா சுதாரியா உள்ளிட்ட நடிகைகளின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது ருக்மணி வசந்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. மேலும், ஹாலிவுட் நடிகையான நடாலியா பர்ன் என்பவரும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்கின்றனர். நயன்தாரா யஷ் அக்கா என தகவல்கள் வெளியான நிலையில், யஷ் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார், வில்லியாக யார் நடிக்கப் போகிறார் என்பதே குழப்பமாக உள்ளதே பாஸ் என்கின்றனர். வரும் மார்ச் 19ம் தேதி கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு 1000 கோடி கன்ஃபார்ம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X