ஒரு பக்கம் அப்படி திட்டுறாங்க.. ஒரு பக்கம் இப்படி கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கிறாங்க.. தலை சுத்துதே!
மும்பை: பாலிவுட்டில் பாப்பராஸி என புகைப்படக் கலைஞர்களை சினிமா உலகினர் அழைத்து வருகின்றனர். உர்ஃபி ஜாவேத்தை எல்லாம் தொடர்ந்து போட்டோ பிடித்தே அவரை ஃபேமஸ் ஆக்கிவிட்டது அவர்கள் தான். சினிமா நடிகர்களையும் குறிப்பாக நடிகைகளையும் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சில சமயங்களில் சில புகைப்படக்கலைஞர்கள் அத்துமீறி நடிகைகளின் ஊப்ஸ் மொமன்ட்களையும் போட்டோவாகவும் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டு விடுகின்றனர். லேட்டஸ்ட்டாக நடிகை பூஜா ஹெக்டே தேவ் படத்தின் புரமோஷனுக்கு சென்றபோது உள்ளாடை தெரிய எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின.

மும்பையில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே புகைப்படக் கலைஞர்களால் நடிகைகளுக்கு லைம் லைட் கிடைப்பதும் அதே போல அசெளகரியங்கள் ஏற்படுவதும் வாடிக்கையான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற பட விழாவில் இளம் நடிகை ருக்சார் தில்லான் வெளிப்படையாக புகைப்படக் கலைஞர்களை விளாசி எடுத்திருந்தார்.
அசிங்கமா இல்லையா?: ரன் ஆண்டனி எனும் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ருக்சார் தில்லான். கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து வருகிறார். வரும் மார்ச் 14ம் தேதி அவர் நடிப்பில் வெளியாகவுள்ள தில்ருபா படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து வந்திருந்தார். அப்போது ஒரு சில புகைப்படக் கலைஞர்கள் தப்பான ஆங்கிளில் படமெடுத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. மேடையில், அதை குறிப்பிட்டு அசிங்கமா இல்லையா? எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு அப்படியெல்லாம் போட்டோ எடுக்காதீங்க என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகைக்கு ஆதரவும் எதிர்ப்பும்: புகைப்படக் கலைஞர்கள் உங்க வீட்டுக்கு வந்து தப்பா போட்டோ எடுக்கவில்லை என்றும் விழா மேடைக்கு ஓவர் கவர்ச்சியாக உடையை அணிந்து வந்துவிட்டு அதை தப்பாக எடுத்துவிட்டார்கள் என புலம்புவது எல்லாம் எப்படி நியாயம் என்றும் போட்டோகிராஃபரை வைத்து தானே நீங்க இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான போட்டோக்களை எடுத்து போடுறீங்க அதெல்லாம் தப்பா தெரியலையா என ருக்சார் தில்லானை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். நடிகையின் கருத்துக்கு ஆதரவும் சோஷியல் மீடியாவில் பெருகி வருகிறது.
ஷெர்லின் சோப்ரா சேட்டை: ஒரு பக்கம் புகைப்படக் கலைஞர்கள் நடிகை எதிர்பாராத சந்தர்பத்தில் தவறாக போட்டோ எடுத்தது பஞ்சாயத்தை கிளப்பி வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா படுகவர்ச்சியான உடையில் புகைப்படக் கலைஞர் ஒருவரை கட்டிப் பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து விளையாடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
தலையே சுத்துது: நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி ஏகப்பட்ட இளம் பெண்களை கெடுத்து வருவதாகவும் இதே போல ஆடையை குறைத்து வீடியோ வெளியிட்டால் நாமும் ஸ்டார் ஆகிவிடலாம் என பலூன் அக்கா, பீரோ அக்கா என பல கன்றாவியான வேலைகளில் இளம் பெண்கள் இறங்க காரணமே முன்னணி நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுப்பது தான் என கடுமையான விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகிறது. புகழ் வெளிச்சம் ஆரம்பத்தில் நடிகைகளுக்கு தேவைப்படும் போது இப்படி உரசிக் கொள்வார்கள். ஒரு ஸ்டேஜுக்கு மேல் சென்று விட்டால் உதறித்தள்ளுவார்கள், எனக்கு பட்டம் பிடிக்கவில்லை, தென்னிந்தியாவே இப்படித்தான் என்றெல்லாம் பேசுவார்கள் என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











