என்னை ஒழித்துக்கட்ட பார்க்கிறார்கள்: அலறும் டாப்ஸி

By Siva

சென்னை: என்னை பற்றி வதந்தி மேல் வதந்தி பரப்பி என்னை ஒழித்துக்கட்ட பார்க்கிறார்கள் என்று நடிகை டாப்ஸி குமுறுகிறார்.

தனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டெல்லிக்கார பொண்ணு டாப்ஸி பண்ணு. அவர் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு குட்டி இடைவேளைக்கு பிறகு அவர் ஆரம்பம் படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் அவரும், ஆர்யாவும் ஒருவரையொருவர் பேபி, பேபி என்று அழைப்பது மிகவும் பிரபலமானது.

வதந்தி

வதந்தி

டாப்ஸியை பற்றி வரும் வதந்திகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. இப்படி அடிக்கடி பரவும் வதந்திகள் அவரை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

கல்யாணம்

கல்யாணம்

நான் நடிக்க வந்ததில் இருந்தே எனக்கு திருமணம் என்று அவ்வப்போது வதந்திகள் பரவுகின்றன. என் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்கிறார்கள் என்று டாப்ஸி தெரிவித்தார்.

டாட்டூ

டாட்டூ

எனக்கு டாட்டூ குத்திக் கொள்ள பிடிக்கும். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு குத்திக் கொண்ட டாட்டூ குறித்து தற்போது குறை கூறுகிறார்கள் என்றார் டாப்ஸி.

வெளிநாடு

வெளிநாடு

என் தங்கையுடன் வெளிநாட்டுக்கு சென்றால் டாப்ஸிக்கு படமே இல்லை அதனால் வெளிநாட்டில் செட்டிலாக சென்றுவிட்டார் என்கிறார்கள் என்று கூறினார் டாப்ஸி.

நயன்தாரா

நயன்தாரா

நானும் நயன்தாராவும் நெருங்கிய தோழிகள். ஆனால் எங்களுக்குள் சண்டை என்று வதந்தியை பரப்புகிறார்கள் என்று குமுறுகிறார் டாப்ஸி.

ஒழித்துக்கட்ட

ஒழித்துக்கட்ட

இப்படி வதந்தி மேல் வதந்தியை பரப்பி என்னை ஒழித்துக்கட்ட பார்க்கிறார்கள். ஆனால் இதை பார்த்து எல்லாம் கவலைப்படாமல் நான் பாட்டுக்கு என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் டாப்ஸி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X