»   »  மகளை களமிறக்கும் ராதிகா!

மகளை களமிறக்கும் ராதிகா!

Subscribe to Oneindia Tamil

வாரிசுகள் வரிந்து கட்டி கல்லாக் கட்டுவதைப் பார்த்த ராதிகா, தனது மகள் ரேயனையும் ஹீரோயினாக்க முடிவுசெய்துள்ளாராம்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவைப் பார்த்த பலரும், இவர் நாயகியா?, எங்கே தேறப் போகிறார்என்றுதான் நினைத்தார்கள். ஆனால் ராதிகாவின் வளர்ச்சியும், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் அடுத்தடுத்து அவர்ஜோடி போட்டதையும், சினிமாவில் உச்சத்தை எட்டியதையும் தமிழ்நாடறியும்.

சினிமாவில் புகழ் பெற்ற ராதிகா, இப்போது டிவியிலும் முன்னணி ஸ்டாராக இருக்கிறார். நடிப்போடு,தயாரிப்பிலும் கலக்கி வரும் ராதிகா. தனது மகள் ரேயனை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளாராம்.

லண்டன் கணவருக்கும், ராதிகாவுக்கும் பிறந்தவர்தான் ரேயன். வாலிப வயதை எட்டி விட்ட ரேயாவைஹீரோயினாக்க அருமையான கதையாக இருந்தால் சொல்லுங்கள் என்று பல இயக்குநர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து பல புதிய இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ராதிகாவை அணுகி கதை கதையாக சொல்லிவருகிரார்களாம்.

மகளுக்கு முக்கியத்துவம் இருப்பது மாதி>யான கதையை தேர்வு செய்யவுள்ளாராம் ராதிகா. கதைரெடியானவுடன், தனது தயாரிப்பிலேயே மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்தப் போகிறாராம்.

எம்.ஆர்.ராதா பரம்பரையில் இன்னும் ஒரு நட்சத்திரம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil