உடல் முழுக்க சிகரெட்டில் சூடு..டார்ச்சர் செய்த கணவர்..விவாகரத்து செய்த நடிகை .. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: 80 காலகட்டத்தின் இறுதியில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடினை சகிலா. தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் எடுத்த இவர், தெலுங்கு சினிமாவிலும் டாப் நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய இவர்,கணவர் கொடுத்த டார்ச்சரால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் குறித்து சினிமா பத்திரிக்கையாளரான ஜோபிதா ஜோசப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், நடிகை சசிகலாவின் உண்மையான பெயர் சகி கௌர் மல்கோத்ரா, அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கர்நாடக மாநிலம் தான். சசிகலாவை தமிழில் அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் மணிவண்ணன் தான் அவர் தான் அவருக்கு சகிகலா என பெயர் வைத்தார். மோகன் ஹீரோவாக நடித்த இளமை காலங்கள் திரைப்படத்தில் அறிமுகமான இவருக்கு முதல் படமே பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து, குவா குவா வாத்துகள், நாகம்,நவக்கிரக நாயகி, ஊமை விழிகள், சங்கர் குரு, வெற்றி விழா போன்ற வெற்றித்திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை சசிகலா: சசிகலாவிற்கு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படவாய்ப்பு வந்தது. ஆனால், சசிகலா என்ற பெயரில் ஏற்கனவே அங்கு நடிகை இருந்ததால், தனது பெயரை ரஜினி என மாற்றிக்கொண்டு நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர், 1998ம் ஆண்டு பெற்றோர் பார்த்து வைத்த டாக்டர் முல்லகிரி பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மூன்று படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பின் சினிமாவை விட்டே விலகி விட்டார்.

காதல் கிசுகிசு: அதே போல இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாந்தை காதலிப்பதாக கிசு கிசுக்கள் வந்தன. ஆனால், அது உண்மை இல்லை என்றும், அவர் என்னை காதலித்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது எனக்கு அவர் மீது காதல் இல்லை என்று சொல்லிவிட்டார். இப்படி நடிகை சசிகலா, மோகன் காதலிப்பதாகக்கூட செய்தி வந்தது. ஆனால், பெற்றோர் பார்த்தவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு காரணம் நடிகை சசிகலா மீது அவரது கணவருக்கு வந்த சந்தேகம் தான். தினமும் டார்ச்சர் என்பதால் கணவனை பிரிந்து, மூன்று குழந்தைகளுடன் தனியாக வந்து குழந்தைகளை வளர்த்து இன்று பெரிய ஆளாக ஆக்கியிருக்கிறார்.

உடம்பு முழுக்க சூடு: ஒளி இல்லாம் என்ற நிகழ்ச்சியில் நான் சென்று இருந்தபோது, ஒரு குடும்பப் பெண் தன் கணவர், சந்தேகப்பட்டு தினம் தினம் டார்ச்சர் செய்வதாகவும், சிகரெட்டால் உடம்பு முழுக்க சூடு வைப்பதாக கூறி இருந்தார், குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், நடிகை என்றால் எந்த மாதிரியான துயரங்களை அனுபவித்து இருப்பார்கள். உண்மையில் சினிமா நடிகைகளின் வாழ்க்கை மிகவும் பாவமானது என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











