டிவி சீரியலா.. போய்யா... போ...சதா
ஜெயம் படத்தில் போய்யா.... போ... என்ற வசனத்தை பேசி பிரபலமானவர் சதா.
ஷங்கர் படத்தில் விக்ரம் கதாநாயகியாக உயர்ந்த சதா கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார்.
கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு வந்துள்ளார். பிரபல நாயகிகளை சீரியல்கள், நிகழ்ச்சிக்கு வளைத்துப் போடும் டிவி சேனல் சதாவை அணுகியுள்ளது.

டிவியிலா நானா?
டிவி சீரியரில் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் சதா.

அது போருங்க….
ஒரு சீரியலில் நடித்தால் 2 அல்லது 3 வருடத்திற்கு அதிலிருந்து விலகமுடியாது. அப்படி நடிப்பது போரடிக்க ஆரம்பித்துவிடும்.

சீரியலில் நடிக்க மாட்டேன்
டிவி ஷோக்களில் வருவது பிடித்திருக்கிறது. ஆனால் சீரியலில் மட்டும் நடிக்க மாட்டேன் என்கிறார் சதா.

குத்துப்பாட்டு
விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தில் சதா குத்துப்பாட்டுக்கு ஆடியதை வைத்தே பெரிய சம்பளத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்கள் சதாவை அணுகியுள்ளன. ஆனால் சதாவோ அசைந்து கொடுக்க மறுத்துவிட்டார்.

டிவியை தவிர்க்க முடியாது
சினிமா நடிகைகள் தவிர்க்க முடியாத அளவுக்கு டி.விக்கள் வளர்ந்திருப்பதையும் ஒப்புக் கொள்கிறேன் என்று கூறும் சதா, சீரியலில் மட்டும் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இப்படித்தான் நிறைய நடிகைங்க சொன்னாங்க கடைசியில் சீரியலுக்கு வந்து தினந்தோறும் கண்ணீர் விட்டு அழுது கொண்டுதான் இருக்கின்றனர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்


Click it and Unblock the Notifications











