For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  த்ரிஷாவுக்கு குறி வைக்கும் சதா தெலுங்கில் அபராஜிதன் (அதாங்க அந்நியன்) பிய்ச்சுக்கிட்டு ஓடுவதால் தெலுங்கு பட அதிபர்கள் சதா வீட்டை முற்றுகையிடத்தொடங்கி விட்டனர். இதனால் த்ரிஷா மார்க்கெட்டை விரைவில் சதா பிடித்து விடுவார் என்று கூறுகிறார்கள். ஷங்கரின் அந்நியன் எதிர்பார்த்ததைப் போலவே நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடுகிறதாம்.மலையாளத்தில் தான் சமீபத்தைய மலையாளப் படங்களின் ரிக்கார்டுகளை முறியடித்து விட்டதாம் அந்நியன். சமீப காலமாகமலையாள சூப்பர் ஹீரோக்களான மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், திலீப் ஆகியோரின் படங்கள் எதுவுமே சரியாகஓடவில்லை.இதனால் கலக்கத்தில் இருந்து வந்த இவர்கள், அந்நியன் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து மேலும் கலங்கிப் போய் இருக்கிறார்கள்.ஏற்கனவே விக்ரமை மலையாள ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயம் உண்டு.தமிழ் திரையுலகம் விக்ரமை ஓரங்கட்டியிருந்த போது சில துக்கடா வேடங்களிலும் செகண்ட் ஹீரோவாகவும் மலையாளப்படங்களில் நடித்திருந்தார். இதனால் விக்ரமின் அந்நியனுக்கு மலையாளத்தில் அமோக வரவேற்பு. சுமார் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக கேரளாவில் நன்றாக ஓடியபடம் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும். அதற்குப் பிறகு அந்நியன் தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளை அந்நியன் முறியடித்து விடும் என்கிறார்கள். இத்தனைக்கும் கேரளாமுழுவதும் மொழி மாற்றம் செய்யாமல் தமிழில் தான் இந்தப் படம் ஓடுகிறது என்பது தான் இதில் குறிப்பிட வேண்டியஇன்னொரு விசேஷம்.மலையாளத்தில் தான் இப்படி என்றால் தெலுங்கில் அபராஜிது என்ற பெயரில் வெளியான அந்நியனுக்கு அங்கும் நல்லவரவேற்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கில் அந்நியன் நன்றாக ஓடுவதால் நாயகன் விக்ரமுக்கு லாபமோ இல்லையோ, நாயகி சதாவுக்கு வாய்ப்புகள்கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. அந்நியனின் அதிரடி ஓட்டத்தால் சதாவுக்கு தெலுங்கில் திடீர் மவுசுஏற்பட்டுள்ளது.போதாக்குறைக்கு இந்தப் படத்தில் ஷங்கரின் புண்ணியத்தில் ரசிகர்களை கவர்ச்சி மழையில் வேறு சதா நனைய வைத்ததுதெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தி விட்டது. இதை அறிந்து கொண்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள் பெரியபெரிய சூட்கேஸ்களுடன் சதவை முற்றுகையிடத் தொடங்கி விட்டார்கள்.முதலாவதாக அவர் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அடுத்து 3படங்களில் நடிக்க மும்முரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.விரைவில் த்ரிஷாவை கவிழ்த்து விடுவார் என்றும் கூறுகிறார்கள்.அந்நியன் கொசுறுகள்: விரைவில் அந்நியன் பிரெஞ்ச் மொழி பேசப் போகிறது. ஹாலிவுட் நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ்அந்நியனை பிரெஞ்ச் மொழியில் டப் செய்து வெளியிடப் போகிறது. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியப் படம் பிரெஞ்ச் மொழியில் டப்பிங் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மலேஷியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து உட்பட 14 நாடுகளில்திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் ரூ. 100 கோடி வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  By Staff
  |

  தெலுங்கில் அபராஜிதன் (அதாங்க அந்நியன்) பிய்ச்சுக்கிட்டு ஓடுவதால் தெலுங்கு பட அதிபர்கள் சதா வீட்டை முற்றுகையிடத்தொடங்கி விட்டனர். இதனால் த்ரிஷா மார்க்கெட்டை விரைவில் சதா பிடித்து விடுவார் என்று கூறுகிறார்கள்.

  ஷங்கரின் அந்நியன் எதிர்பார்த்ததைப் போலவே நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் எதிர்பார்த்ததை விட நன்றாக ஓடுகிறதாம்.

  மலையாளத்தில் தான் சமீபத்தைய மலையாளப் படங்களின் ரிக்கார்டுகளை முறியடித்து விட்டதாம் அந்நியன். சமீப காலமாகமலையாள சூப்பர் ஹீரோக்களான மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், திலீப் ஆகியோரின் படங்கள் எதுவுமே சரியாகஓடவில்லை.

  இதனால் கலக்கத்தில் இருந்து வந்த இவர்கள், அந்நியன் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து மேலும் கலங்கிப் போய் இருக்கிறார்கள்.ஏற்கனவே விக்ரமை மலையாள ரசிகர்களுக்கு நன்றாகவே பரிச்சயம் உண்டு.

  தமிழ் திரையுலகம் விக்ரமை ஓரங்கட்டியிருந்த போது சில துக்கடா வேடங்களிலும் செகண்ட் ஹீரோவாகவும் மலையாளப்படங்களில் நடித்திருந்தார். இதனால் விக்ரமின் அந்நியனுக்கு மலையாளத்தில் அமோக வரவேற்பு.

  சுமார் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக கேரளாவில் நன்றாக ஓடியபடம் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும். அதற்குப் பிறகு அந்நியன் தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

  விரைவில் மலையாளப் படங்களின் வசூல் சாதனைகளை அந்நியன் முறியடித்து விடும் என்கிறார்கள். இத்தனைக்கும் கேரளாமுழுவதும் மொழி மாற்றம் செய்யாமல் தமிழில் தான் இந்தப் படம் ஓடுகிறது என்பது தான் இதில் குறிப்பிட வேண்டியஇன்னொரு விசேஷம்.

  மலையாளத்தில் தான் இப்படி என்றால் தெலுங்கில் அபராஜிது என்ற பெயரில் வெளியான அந்நியனுக்கு அங்கும் நல்லவரவேற்பு கிடைத்திருக்கிறது.

  தெலுங்கில் அந்நியன் நன்றாக ஓடுவதால் நாயகன் விக்ரமுக்கு லாபமோ இல்லையோ, நாயகி சதாவுக்கு வாய்ப்புகள்கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. அந்நியனின் அதிரடி ஓட்டத்தால் சதாவுக்கு தெலுங்கில் திடீர் மவுசுஏற்பட்டுள்ளது.

  போதாக்குறைக்கு இந்தப் படத்தில் ஷங்கரின் புண்ணியத்தில் ரசிகர்களை கவர்ச்சி மழையில் வேறு சதா நனைய வைத்ததுதெலுங்கு ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தி விட்டது. இதை அறிந்து கொண்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள் பெரியபெரிய சூட்கேஸ்களுடன் சதவை முற்றுகையிடத் தொடங்கி விட்டார்கள்.

  முதலாவதாக அவர் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அடுத்து 3படங்களில் நடிக்க மும்முரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

  விரைவில் த்ரிஷாவை கவிழ்த்து விடுவார் என்றும் கூறுகிறார்கள்.

  அந்நியன் கொசுறுகள்: விரைவில் அந்நியன் பிரெஞ்ச் மொழி பேசப் போகிறது. ஹாலிவுட் நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ்அந்நியனை பிரெஞ்ச் மொழியில் டப் செய்து வெளியிடப் போகிறது.

  இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியப் படம் பிரெஞ்ச் மொழியில் டப்பிங் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, மலேஷியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து உட்பட 14 நாடுகளில்திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் ரூ. 100 கோடி வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Read more about: sadhas telugu market goes up
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X