»   »  த்ரிஷா 85, சதா 35!

த்ரிஷா 85, சதா 35!

Subscribe to Oneindia Tamil

தமிழில் இருந்து சடக்கென தெலுங்குப் பக்கம் தாவி விட்ட த்ரிஷா அங்கு தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாராம்.

தமிழில் அறிமுகமாகி படு வேகத்தில் முன்னேறி டாப் ஸ்டாராக மாறிய த்ரிஷா இப்போது தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்.டப்பு அதிகம் என்பதால் அங்கேயே டென்ட் அடித்துள்ளார்.

தெலுங்கில் த்ரிஷாவின் இப்போதைய சம்பளம் ரூ. 85 லட்சம் என்கிறார்கள். தயாப்பாளர்காருகளும் த்ரிஷா கேட்டதைக் கொடுக்கத்தயாராக இருக்கிறார்களாம். டப்புக்கேற்றவாறு கவர்ச்சியையும் ஹை பிட்ச்சில் கொடுக்கிறாராம் த்ரிஷா.

தெலுங்கில் ஷகீலாக்களுக்கு பஞ்சம் இல்லாவிட்டாலும் த்ரிஷாவின் கவர்ச்சிக்கு அங்கு செம மவுசு. இதனால் ஹீரோக்களுக்கு இணையாகசம்பளத்தை கோடிக்கு மிக அருகில் ரூ. 85 லட்சத்தில் போய் நிறுத்தியிருக்கிறார் த்ரிஷா.

தமிழ் ஹீரோக்களை தனது பேச்சால் கவர்ந்து அவர்களை பிராக்கெட் போட்டுக் கொண்டு வாய்ப்புகளை பிடித்ததுபோல தெலுங்கிலும்கையாளுகிறார். இதனால் ஹீரோக்களின் ஆதரவும் த்ரிஷாவுக்கே உள்ளது.

இந்த சம்பளம் குறையும் வரை தெலுங்குக்கே த்ரிஷா முக்கியத்துவம் கொடுப்பார் என்கிறார்கள். தமிழில் இவ்வளவு பெரிய தொகையையாரும் தர மாட்டார்கள் என்பதே இதற்குக் காரணம்.


தமிழிலிருந்து தெலுங்குக்குப் போன த்ரிஷாவைப் போல தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள சதாவும் தனது சம்பளத்தை ஏக்குதப்பாகஏற்றிவிட்டாராம்.

ஜெயம் படத்தில் அவருக்கு ரூ. 15லட்சம் சம்பளம் தரப்பட்டது. இப்போது அது ரூ. 35 லட்சம் ஆகிவிட்டது. அதுவும் அந்நியன் வரும்வரைக்குதானாம். அந்நியனுக்குப் பின் 50தைத் தொட்டுவிடுவாராம் சதா.

ஆரம்பத்தில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று முரண்டு பிடித்த சதா, ஷங்கரின் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு அந்நியனில் போதுமானகவர்ச்சியைக் காட்டி நடித்துள்ளார் சதா.

இந் நிலையில் சதாவுக்கு உதட்டில் ஏதோ ஆபரேஷன் நடந்ததாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த பிரபல முக சீரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் பாலாஜி என்பவரிடம் சதா தனது உதட்டைஅழகுபடுத்துவதற்காக ஆபரேஷன் செய்து கொண்டார் என்று கோலிவுட் குருவிகள் கூறினாலும் அதை சதா தரப்பு மறுக்கிறது.

தேனீ கடித்ததால் உதடு வீங்கிவிட்டது. இப்போது ஓகே ஆகிவிட்டது, ஆபரேசேன் எல்லாம் நடக்கவே இல்லை என்கிறார்கள்.

இதுவரை பாவாடை-தாவணியில் வந்து போய்க் கொண்டிருக்கும் சதாவுக்கு மாதவனுடன் நடிக்கும் ப்ரியசகி படத்தில் ஒரு குழந்தைக்குதாயாக நடிக்கும் மெச்சூர்ட் கேரக்டராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil