»   »  தூது விடும் சதா!

தூது விடும் சதா!

Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சதா பி.ஆர்.ஓ. ஒருவரைவாடகைக்கு அமர்த்தி தூது விட ஆரம்பித்துள்ளாராம்.

ஜெயம் சதாவுக்கு அந்நியனுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி தமிழில் படங்கள்கிடைக்கவில்லை. அந்நியன் தன்னைத் தூக்கோ தூக்கென்று தூக்கி விடும் என்றுநம்பிக் கொண்டிருந்தார் சதா. அப்படியே சம்பளத்தையும் ஏற்றி விடலாம் எனவும்திட்டமிட்டிருந்தார்.

இந்தக் காரணத்தாலேயே, அந்நியன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வந்தவாய்ப்புகளையெல்லாம் மறுத்து வந்தார். ஆனால் அந்நியன் வந்தது, படமும் ஓடியது.ஆனால் சதாவுக்குத்தான் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது.

இப்போது சதா கையில் உன்னாலே உன்னாலே என்ற படமும், தெலுங்கில் ஒருபடமும் மட்டுமே உள்ளது. இடையில் சற்று தளர்ந்து போயிருந்த சதா இப்போது முழுவீச்சில் வாய்ப்பைப் பிடிக்க வலை வீசத் தொடங்கியுள்ளார்.

இதற்காக ஒரு பி.ஆர்.ஓவை அமர்த்தியுள்ளாராம். அவர் மூலம் முன்னணி நடிகர்கள்,இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அணுகி வாய்ப்பு தாருங்கள் ப்ளீஸ் என்றுகொஞ்சலாக கெஞ்ச ஆரம்பித்துள்ளாராம்.

தமிழிலும், தெலுங்கிலும் இந்த வாய்ப்பு வலையை வீசியுள்ளாராம். இதில் எந்தத்தலை சிக்கப் போகிறது என்று தெரியவில்லை. எந்த வாய்ப்பாக இருந்தாலும்பரவாயில்லை என்று வலையை வீசி வைத்து விட்டு மீனுக்காக காத்திருக்கும் கொக்குபோல இலவு காத்துக் கொண்டிருக்கிறாராம் சதா.

முன்பு மாதிரி சத்தாய்க்கும் சதாவாக இல்லையாம், சமர்த்து ப் பொண்ணாக மாறிவிட்டாராம். இதைச் சொல்லித்தான் அந்த பி.ஆர்.ஓ. வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

பேஷ் பேஷ் கேக்கவே, ரொம்ப நன்னா இருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil