»   »  சிரஞ்சீவி படத்தில் சதா!

சிரஞ்சீவி படத்தில் சதா!

Subscribe to Oneindia Tamil

சதாவின் திரையுலக மார்க்கெட்டில் நிலவிய வாய்ப்புப் பஞ்சம் ஒரு வழியாக .டிவுக்கு வருகிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க சதாஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல தமிழிலும் ஒரு புதிய படம் வந்துள்ளதாம்.

ஜெயம் படம் மூலம் தமிழுக்கும், தெலுங்குக்கும் அறிமுகமான சதா, அதன் பின்னர் படு வேகமாக முன்னேறினார். இருந்தாலும் அவர் போட்டகண்டிஷன்கள், காட்டிய பந்தாக்கள் காரணமாக பெரிய அளவில் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கிலும் அதே கதிதான்.

ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்தபோது, நம்ம ரேஞ்சு இனிமே வேற என்ற மிதப்பில், வந்த வாய்ப்புகளையும் ஒதுக்கி வைத்தார். அந்நியனுக்குப்பிறகு டிமாண்ட் கூடும், வசூலை அள்ளி விடலாம் என்ற நினைப்புதான் காரணம்.

ஆனால் அந்நியனுக்குப் பிறகு திருப்பதி படம் மட்டுமே சதாவுக்குக் கிடைத்தது. அந்நியன், சதாவை சினிமா உலகிலிருந்தே அந்நியப்படுத்தி விட்டது.தமிழிலும், தெலுங்கிலும் சதா ஓரம் கட்டப்பட்டார். ஓய்ந்து போய்க் கிடந்த சதாவுக்கு பிரபு தேவா வடிவில் சந்தோஷம் கிடைத்துள்ளது.

தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து அவர் இயக்கவுள்ள சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தில் சதாவை நடிக்க வைக்கப் போகிறார் பிரபு தேவா. இதற்காகசதாவை பிரபு தேவா தொடர்பு கொண்டபோது அவருக்கு பெரிய ஆச்சரியமாகப் போய் விட்டதாம். நிஜமா, நிஜமா என்று பலமுறைபிரபுதேவாவிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு சந்தோஷமடைந்தாராம்.

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை திரையுலகில் தனக்குக் கிடைத்த மறு பிறவியாக நினைக்கிறாராம் சதா. இதே போலதமிழிலும் ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

சந்தோஷ சாகரத்தில் மூழ்கிக் கிடந்த சதாவிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் பொய் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் எனக்கு கடந்த சிலமாதங்களில் எந்தப் புதுப் படமும் வரவில்லை. இது எனக்கு பெரும் கவலையாக இருந்தது.

ஆனால் இப்போது எல்லாமே மாறி விட்டது. இந்த ஆண்டு எனது ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சிரஞ்சீவியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது. இதன் மூலம் எனது வாழ்நாள் நிறைவேறியுள்ளது. சிரஞ்சீவியுடன் நடிக்கப் போகும் செய்தியைக்கேட்டது முதலே எனது கால்கள் பூமியிலேயே இல்லை. அப்படியே ஜிவ்வென்று பறப்பது போல உள்ளது.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக நடித்து எனது மார்க்கெட்டை ஸ்திரப்படுத்திக் கொள்ளப் போகிறேன் என்றார் சதா.ஜமாய்ங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil