»   »  சம்பளத்தை குறைத்த சதா

சம்பளத்தை குறைத்த சதா

Subscribe to Oneindia Tamil

நாயகிகளின் கிளாமர் போட்டியில் சிக்கி சடசடவென சரிந்து கொண்டிருக்கும் மார்க்கெட்டை தூக்கிப் பிடிக்கும்முயற்சியாக தனது சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டார் சதா.

ஜெயம் பட மூலம் தமிழ் சினிமாவுக்கு சதா வந்தபோது அடுத்த நதியா, அடுத்த ரேவதி என எல்லோரும் எழுதித்தள்ளினர். ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் சதாவின் மார்க்கெட் மங்கிப் போனது.

அந்நியன் மூலம் மறு பிரவேசம் செய்ய நினைத்திருந்தார். ஆனால் படம் பேசப்பட்ட அளவுக்கு சதாபேசப்படவில்லை. இதனால் நொந்து போன சதா தெலுங்கும், கன்னடத்திற்கும் தாவினார். ஆனால் அங்கும்கொள்வார் இல்லாததால், குழம்பிப் போனார்.

இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகும் ஜென்மம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்காக ஒத்துக்கொண்டார். அங்கும் கூடுதலாக ஒரு நாள் கால்ஷீட் கேட்டதால் கூடுதல் சம்பளம் கேட்டு பெயரைக் கெடுத்துக்கொண்டார். இப்படி பெரும் குழப்பமாக சதா திகழ்வதால் அவருக்கு வரும் படங்களின் சுனாமி வேகத்தில்குறைந்து கொண்டுள்ளன.


நிலைமை மோசமாகி விடுவதற்குள் சுதாரித்துக் கொள்ளும் விதமாக தனது சம்பளத்தைக் குறைததுக்கொண்டுள்ளாராம் சதா. முன்பு 15 (லகரம்தான்) கேட்டு வந்த சதா இப்போது 7 லட்சம் போதும் என்கிறாராம்.அத்தோடு புதிதாக ஒரு ஆல்பத்தையும் ரெடி செய்து பிரஷ்ஷாக உலவ விட்டுள்ளார்.

முடிவு என்னவோ புத்திசாலித்தனமானது தான். பலன் கிடைத்தால் சரித்தான். அதற்கு பந்தாவை, கெடுபிடிகளைதூக்கித் தூரப் போட வேண்டும்.

போடுவாரா சதா?

Read more about: sadha reduces remuneration

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil