ஹீரோயின்
ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகை சதா நடிக்கும் படம் வர்ணஜாலம். இந்த படத்தில் போய்யா.. போஎன்று இவர் விரட்டப்போவது நடிகர் ஸ்ரீகாந்தை.
சதாவிற்கு தமிழ் தெரியாத காரணத்தால் அவர் நடிக்கும் காட்சிகளின் வசனத்தை முதல் நாளே கொடுத்துவிடுகிறார்கள். அவர் அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு, மறுநாள் படப்பிடிப்பிற்கு முதல்நாளே மனப்பாடம் செய்து கொள்கிறார்.
அப்படியிருந்தும் படப்பிடிப்பின்போது சரியாக வசனம் பேச முடியாமல், தமிழையும், இயக்குனரையும் படாய்படுத்துகிறாராம்.
டப்பிங்கில் வேறு ஒருவரை வைத்து குரல் கொடுத்துவிடலாம் என்றாலும் படப் பிடிப்பின்போது வார்த்தைக்கு ஏற்பசரியாக வாயையாவது அசைக்க வேண்டுமே. அதைக் கூட செய்ய முடியாமல் திணறுகிறாராம்.
இயக்குனர் புதியவர் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு மிகவும் பொறுமையாக சொல்லிக் கொடுத்து, தனக்குத்தேவையான நடிப்பைப் பெற்றுக் கொள்கிறார்.
More from Filmibeat
cinema gayathiri raghuram karhtik kiran kousalya lanka prabhakaran prabhu ramanan sherin sibi sneha tamil news tamilnadu thatstamil thulluvatho ilamai


Click it and Unblock the Notifications











