ஹீரோயின்
சதா, சதாய்க்க ஆரம்பித்து விட்டாரம், அதாவது லொள்ளு பண்ண ஆரம்பித்து விட்டாராம்.
சதா தெரியுமோல்லியோ? அதாங்கோ, ஜெயம் படத்தில், போ, போ, போய்யா என்று கையை காது வரைக்கும்தூக்கிக் கொண்டு செல்லமாக கோபித்துக் கொள்கிறாரே, அதே அம்மணிதான்.
தெலுங்குக்கார அம்மணியான சதா, அங்கு சில படங்களில் நடித்து வெற்றிக் கொடி ஆரம்பித்த நிலையில், தமிழில்ஜெயம் படத்தில் வாய்ப்பு வர அதில் நடித்தார். படம் ரிலீசாகி ஹிட் ரேஞ்சுக்கு போய்க் கொண்டுள்ளதால்,கோலிவுட் தயாப்பாளர்கள் சதா வீட்டு வாசலில் குழும ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், சதா பண்ணிய லொள்ளைக் கண்டு பயந்து போய் இப்போது ஒட்டுமொத்தமாக கூடி சோகமாககும்மியடித்துக் கொண்டுள்ளனராம். அம்மணி கேட்கும் தொகை அம்மாடியோவ் என்று கத்த வைக்கிறதாம்.
கிட்டத்தட்ட ரூ. 1 கோடியை ஒட்டி சம்பளம் கேட்கிறாராம். வந்ததுமே இப்படியா என்று வாய் பிளந்து நிற்கின்றனர்தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











