twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சைவமான சதா அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டார் சதா. என்ன புரியவில்லையா? முன்பெல்லாம் சிக்கன், மட்டன் வகையறாக்களைஒரு பிடி பிடித்து வந்த சதா, இப்போது கொஞ்சம், கொஞ்சமாக இட்லி, சாம்பாருக்கு மாறிவிட்டார். சென்னை வந்தால் இந்த அயிட்டங்களைத் தான் அவர் கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் அந்நியன் ஓடும் ஓட்டத்தால் சதா ஒருசுற்று பெருத்து விட்டார். அந்நியன் ஓட, ஓட சதாவின் ரேட்டும் ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் படங்கள் எதுவும் புக்காகிறவழியைத் தான் காணவில்லை.இதனால் பல தயாரிப்பாளர்கள் சதாவை நெருங்கவே பயப்படுகிறார்கள். இந்த விஷயம் சதாவின் காதுக்குப் போக எங்கே,அப்படியே தன்னை ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.இதனால் படா தயாரிப்பாளர்களைப் பார்த்தால் சதாவே வலிய சென்று அவர்களிடம் பசை போல ஒட்டி விடுகிறார். அவர்களைஅப்படியே ஒரு ஓரமாக இழுத்து வந்து, ஷங்கர் சார் படத்தில நடிச்சதால என்னை பெரிய இடத்து சமாச்சாரம்னுஓரங்கட்டிடாதீங்க.எவ்வளவு பெரிய டைரக்டர்களின் படத்தில் நடித்தாலும் நான் எப்போதுமே சாதாரண சதா தான். போத்திக்கிட்டு நடிக்கணுமா,அல்லது அப்படியே மும்பை ரேஞ்சுக்கு நடிக்கணுமா எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார்.நீங்க கொடுக்கிற துட்டுக்கு எந்த வஞ்சகமும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று நைசாக பேசி ஆளைக் கவிழ்க்கும்வேலையில் ஈடுபட்டுள்ளார் சதா. ஆனாலும் யாரும் சதாவிடம் மசிந்த மாதிரி இல்லை ( அந்நியன் சதாவால் ஓடவில்லை என்றுஇவர்களுக்கு தெரியாதா என்ன?).அந்நியனுக்குப் பிறகு வெளியான பிரிய சகி எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் சதா தரப்பு அப்செட்டில் உள்ளது. பிரிய சகியும்ஓடிவிட்டால் கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று அவர் போட்டு வைத்திருந்த திட்டம் தவிடு பொடியாகிவிட்டது.சதாவைப் பற்றிய ஒரு கொசுறு: முன்பெல்லாம் பறப்பன, நடப்பன, ஊர்வன என சகல வகையறாக்களையும் மூச்சு முட்ட ஒருபிடி பிடித்து வந்த சதா இப்போது அவற்றையெல்லாம் குறைத்து விட்டாராம்.வாரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ நாள் மட்டும் தான் நான் வெஜ் என்று தீர்மானம் போட்டுள்ளாராம். மற்ற நாட்களில் 100சதவீதம் வெஜிட்டேரியன் உணவை மட்டும் தான் சாப்பிடுகிறார்.சென்னைக்கு வந்தால் மணக்க மணக்க மல்லிகைப் பூ இட்லி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் என கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

    By Staff
    |

    அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டார் சதா. என்ன புரியவில்லையா? முன்பெல்லாம் சிக்கன், மட்டன் வகையறாக்களைஒரு பிடி பிடித்து வந்த சதா, இப்போது கொஞ்சம், கொஞ்சமாக இட்லி, சாம்பாருக்கு மாறிவிட்டார்.

    சென்னை வந்தால் இந்த அயிட்டங்களைத் தான் அவர் கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் அந்நியன் ஓடும் ஓட்டத்தால் சதா ஒருசுற்று பெருத்து விட்டார். அந்நியன் ஓட, ஓட சதாவின் ரேட்டும் ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் படங்கள் எதுவும் புக்காகிறவழியைத் தான் காணவில்லை.

    இதனால் பல தயாரிப்பாளர்கள் சதாவை நெருங்கவே பயப்படுகிறார்கள். இந்த விஷயம் சதாவின் காதுக்குப் போக எங்கே,அப்படியே தன்னை ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் படா தயாரிப்பாளர்களைப் பார்த்தால் சதாவே வலிய சென்று அவர்களிடம் பசை போல ஒட்டி விடுகிறார். அவர்களைஅப்படியே ஒரு ஓரமாக இழுத்து வந்து, ஷங்கர் சார் படத்தில நடிச்சதால என்னை பெரிய இடத்து சமாச்சாரம்னுஓரங்கட்டிடாதீங்க.

    எவ்வளவு பெரிய டைரக்டர்களின் படத்தில் நடித்தாலும் நான் எப்போதுமே சாதாரண சதா தான். போத்திக்கிட்டு நடிக்கணுமா,அல்லது அப்படியே மும்பை ரேஞ்சுக்கு நடிக்கணுமா எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார்.


    நீங்க கொடுக்கிற துட்டுக்கு எந்த வஞ்சகமும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று நைசாக பேசி ஆளைக் கவிழ்க்கும்வேலையில் ஈடுபட்டுள்ளார் சதா. ஆனாலும் யாரும் சதாவிடம் மசிந்த மாதிரி இல்லை ( அந்நியன் சதாவால் ஓடவில்லை என்றுஇவர்களுக்கு தெரியாதா என்ன?).

    அந்நியனுக்குப் பிறகு வெளியான பிரிய சகி எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் சதா தரப்பு அப்செட்டில் உள்ளது. பிரிய சகியும்ஓடிவிட்டால் கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்று அவர் போட்டு வைத்திருந்த திட்டம் தவிடு பொடியாகிவிட்டது.

    சதாவைப் பற்றிய ஒரு கொசுறு: முன்பெல்லாம் பறப்பன, நடப்பன, ஊர்வன என சகல வகையறாக்களையும் மூச்சு முட்ட ஒருபிடி பிடித்து வந்த சதா இப்போது அவற்றையெல்லாம் குறைத்து விட்டாராம்.

    வாரத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ நாள் மட்டும் தான் நான் வெஜ் என்று தீர்மானம் போட்டுள்ளாராம். மற்ற நாட்களில் 100சதவீதம் வெஜிட்டேரியன் உணவை மட்டும் தான் சாப்பிடுகிறார்.

    சென்னைக்கு வந்தால் மணக்க மணக்க மல்லிகைப் பூ இட்லி, கொத்தமல்லி சட்னி, சாம்பார் என கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

      Read more about: sadha turns to vegetarian
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X