சதாவின் புதிய திட்டம் அந்நியன் பரபரப்பை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த சதாவின் திட்டம் தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்நியன் படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் என்ன என்று கேட்டால் எல்லோரும் கூறுவது என்ன தெரியுமா? படத்தின்ஹீரோயின் சதா. விக்ரமின் நடிப்புக்கு முன்னால் சதாவின் நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்பதே பலரின் கருத்து.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா முழுவதும் அந்நியனின் புண்ணியத்தில் அம்மணி பாப்புலராகிவிட்டார். இதனால் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக அந்நியன் பரபரப்பாக ஓட தனக்கும் வாய்ப்புகள் வந்துகுவியும் என்று நினைத்தார் சதா. ஆனால் தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களிடம் அந்நியன் நினைப்பில் சம்பளமாக பல விரல்களைக் காட்டியுள்ளார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டனர்.ஆனாலும் நம்மைத் தேடி கண்டிப்பாக பொட்டியுடன் கியூவில் நிற்பார்கள் என்று வாசல் கதவை திறந்து வைத்தது தான் மிச்சம்.யாரும் அவரை சீண்டவில்லை.இதனால் வெறுத்துப் போன அம்மணி சரி, தெலுங்கை நோக்கி படையெடுக்கலாம் என்று பெட்டி, படுக்கையுடன் அங்குபோனார். அங்கு விதி வேறு ரூபத்தில் விளையாடியது. போன வேகத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ஒருபடம் புக்கானது.இந்த நிலைமையில் தான் சதாவைப் பற்றி ஒரு வதந்தி வேகமாக பரவியது. பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவிருந்த தெலுங்குப்படத்திலிருந்து சதாவை நீக்கி விட்டதாக வேகமாக தகவல் பரவியது.பாலகிருஷ்ணாவுக்கும், சதாவுக்கும் ஜோடிப் பொருத்தம் இல்லையென்றும், சதா ரொம்பச் சின்னப் பொண்ணாக தெரிகிறார்என்றும் பேசப்பட்டதால் சதாவை நீக்கி விட்டதாக சொன்னார்கள்.கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியதால் படத்திலிருந்து சதாவை கழட்டி விட்டு விட்டதாக இன்னொரு தகவல் கூறியது.இதனால் அதிர்ச்சியடைந்த சதா, அவசரம், அவசரமாக தெலுங்கு பத்திரிகையாளர்களை அழைத்து பேசினார். பாலகிருஷ்ணாபடத்திலிருந்து நான் நீக்கப்படவில்லை. நான் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியே.நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறவில்லை. தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனதுஆசை. அப்படி இருக்கும் போது என்னைப் பற்றி வெளிவரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.தமிழில் தான் வாய்ப்பில்லை. எனவே தெலுங்கில் வரும் வாய்ப்பை எந்த விதத்திலும் விட்டு விடக்கூடாது என்பதற்காகஇனிமேல் படு கவர்ச்சியாக நடிக்க சதா திட்டமிட்டுள்ளாராம்.ம்...கொடுத்து வைத்த தெலுங்கு ரசிகர்கள்!

By Staff

அந்நியன் பரபரப்பை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்திருந்த சதாவின் திட்டம் தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நியன் படத்தின் ஒரே மைனஸ் பாயிண்ட் என்ன என்று கேட்டால் எல்லோரும் கூறுவது என்ன தெரியுமா? படத்தின்ஹீரோயின் சதா. விக்ரமின் நடிப்புக்கு முன்னால் சதாவின் நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்பதே பலரின் கருத்து.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியா முழுவதும் அந்நியனின் புண்ணியத்தில் அம்மணி பாப்புலராகிவிட்டார். இதனால் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக அந்நியன் பரபரப்பாக ஓட தனக்கும் வாய்ப்புகள் வந்துகுவியும் என்று நினைத்தார் சதா.

ஆனால் தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களிடம் அந்நியன் நினைப்பில் சம்பளமாக பல விரல்களைக் காட்டியுள்ளார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டனர்.

ஆனாலும் நம்மைத் தேடி கண்டிப்பாக பொட்டியுடன் கியூவில் நிற்பார்கள் என்று வாசல் கதவை திறந்து வைத்தது தான் மிச்சம்.யாரும் அவரை சீண்டவில்லை.

இதனால் வெறுத்துப் போன அம்மணி சரி, தெலுங்கை நோக்கி படையெடுக்கலாம் என்று பெட்டி, படுக்கையுடன் அங்குபோனார். அங்கு விதி வேறு ரூபத்தில் விளையாடியது. போன வேகத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ஒருபடம் புக்கானது.

இந்த நிலைமையில் தான் சதாவைப் பற்றி ஒரு வதந்தி வேகமாக பரவியது. பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவிருந்த தெலுங்குப்படத்திலிருந்து சதாவை நீக்கி விட்டதாக வேகமாக தகவல் பரவியது.


பாலகிருஷ்ணாவுக்கும், சதாவுக்கும் ஜோடிப் பொருத்தம் இல்லையென்றும், சதா ரொம்பச் சின்னப் பொண்ணாக தெரிகிறார்என்றும் பேசப்பட்டதால் சதாவை நீக்கி விட்டதாக சொன்னார்கள்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியதால் படத்திலிருந்து சதாவை கழட்டி விட்டு விட்டதாக இன்னொரு தகவல் கூறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதா, அவசரம், அவசரமாக தெலுங்கு பத்திரிகையாளர்களை அழைத்து பேசினார். பாலகிருஷ்ணாபடத்திலிருந்து நான் நீக்கப்படவில்லை. நான் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தியே.

நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறவில்லை. தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனதுஆசை. அப்படி இருக்கும் போது என்னைப் பற்றி வெளிவரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

தமிழில் தான் வாய்ப்பில்லை. எனவே தெலுங்கில் வரும் வாய்ப்பை எந்த விதத்திலும் விட்டு விடக்கூடாது என்பதற்காகஇனிமேல் படு கவர்ச்சியாக நடிக்க சதா திட்டமிட்டுள்ளாராம்.

ம்...கொடுத்து வைத்த தெலுங்கு ரசிகர்கள்!

Read more about: sadhas new plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X