twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்குக்கு பறந்த சதா ஷங்கரின் பிரமாண்ட அந்நியன் படத்தில் நடித்த சதா, அந்தப் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் புக்காகும் என்று எதிர்பார்ப்பில்இருந்தார். சம்பளத்தை உயர்த்துவதற்காக அந்தப் படம் முடியும் வரை வேறு படங்கள் எதிலும் புக் ஆகாமல் தவிர்த்து வந்தார்.இதனால் அவரைத் தேடிப் போனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இந் நிலையில் அந்நியன் மாபெரும் வெற்றியடைந்தாலும் சதாவைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புக்கள் வரவில்லை. காரணம்அவர் கேட்கும் அதிகப்படியான சம்பளம் தான்.இப்போது தமிழில் அஜீத்துடன் திருப்பதி என்ற ஒரே ஒரு புதிய படத்தில் மட்டும் நடிக்கிறார் சதா. தனக்கு சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தாராம். அதிலும் சதாவுக்கு ஏமாற்றமேமிச்சம். இதனால் நொந்து போன சதா திருப்பதி சூட்டிங்கில் தனது போர்ஷன்கள் முடிவடைந்த நிலையில் மும்பைக்கேபறந்துவிட்டார்.அங்கிருந்து அடிக்கடி ஹைதராபாத்துக்குப் பறந்து சென்று தெலுங்கு படங்களில் சான்ஸ் தேடி வருகிறார். சதாவே தேடிவந்துவிடுவதால் அவரைப் பார்க்கும் முன்னணி ஹீரோக்கள் உடனே தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டுவிடுகிறார்கள்.இதனால் படங்களும் புக் ஆகி வருகின்றன.இப்போது தெலுங்கில் மூணு படங்களில் நடிக்க வாய்ப்புக்களைப் பிடித்துவிட்டார். தெலுங்கில் சதா தீவிரம் காட்டக் காரணம்,அங்கு கை சுத்தம், வாய் சுத்தமாம். கேட்ட பணத்தை கொட்டிக் கொடுத்து விடுகிறார்களாம். அப்படி கொடுத்ததால் தான் மும்பையில் முன்று கிரவுண்டில் சுமார் ரூ. 2 கோடி செலவில் ஆடம்பர பங்களா கட்டி வருகிறார் சதா.மேலும் சென்னை, ஹைதராபாத்திலும் நிலம் வாங்கி போட்டிருக்கிறார்.(சதாவுக்கு சில ரியல் எஸ்டேட் முதலைகளுடன் நல்ல நட்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்)தெலுங்கில் சம்பளத்தை அள்ளித் தரும் அதே வேளையில் சதாவிடம் இருந்து கவர்ச்சியையும் கறந்து எடுத்துவிடுகிறார்கள்.தெலுங்கு தவிர கன்னடத்திலும் மீண்டும் நுழைந்துள்ளார் சதா. அங்கிருந்து தான் இவரது சினிமா பயணம் கிளம்பியது. புதியகன்னட படத்தில் சதாவுக்கு துப்பறியும் பத்திரிகையாளர் வேடமாம். என்ன இனிமே தமிழ் அவ்ளோ தானா என்று ஹைதராபாத்தில் சதாவைப் பிடித்துக் கேட்டபோது அதை அதை வேகமாகமறுத்தார்.நான் மும்பை பொண்ணு. ஆனால், தமிழ் மூலம் தான் நான் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனேன். எனவே என்னால்தமிழை மறக்க முடியாது, மறக்கவும் மாட்டேன். தெலுங்கில் அதிக சம்பளம் தருகிறார்கள் என்பதற்காகவோ அல்லது தமிழில்வாய்ப்புகள் குறைந்து விட்ட காரணத்தாலோ நான் ஹைதராபாத்தில் குடியேறவில்லை.நல்ல வாய்ப்புகள் வருவதால் தெலுங்கில் நடித்து வருகிறேன். தமிழிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.அப்படித்தான் திருப்பதியில் நடித்து வருகிறேன் என்றார்.

    By Staff
    |
    ஷங்கரின் பிரமாண்ட அந்நியன் படத்தில் நடித்த சதா, அந்தப் படத்துக்கு பிறகு நிறைய படங்கள் புக்காகும் என்று எதிர்பார்ப்பில்இருந்தார். சம்பளத்தை உயர்த்துவதற்காக அந்தப் படம் முடியும் வரை வேறு படங்கள் எதிலும் புக் ஆகாமல் தவிர்த்து வந்தார்.இதனால் அவரைத் தேடிப் போனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந் நிலையில் அந்நியன் மாபெரும் வெற்றியடைந்தாலும் சதாவைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புக்கள் வரவில்லை. காரணம்அவர் கேட்கும் அதிகப்படியான சம்பளம் தான்.

    இப்போது தமிழில் அஜீத்துடன் திருப்பதி என்ற ஒரே ஒரு புதிய படத்தில் மட்டும் நடிக்கிறார் சதா.

    தனக்கு சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தாராம். அதிலும் சதாவுக்கு ஏமாற்றமேமிச்சம். இதனால் நொந்து போன சதா திருப்பதி சூட்டிங்கில் தனது போர்ஷன்கள் முடிவடைந்த நிலையில் மும்பைக்கேபறந்துவிட்டார்.

    அங்கிருந்து அடிக்கடி ஹைதராபாத்துக்குப் பறந்து சென்று தெலுங்கு படங்களில் சான்ஸ் தேடி வருகிறார். சதாவே தேடிவந்துவிடுவதால் அவரைப் பார்க்கும் முன்னணி ஹீரோக்கள் உடனே தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டுவிடுகிறார்கள்.இதனால் படங்களும் புக் ஆகி வருகின்றன.

    இப்போது தெலுங்கில் மூணு படங்களில் நடிக்க வாய்ப்புக்களைப் பிடித்துவிட்டார். தெலுங்கில் சதா தீவிரம் காட்டக் காரணம்,அங்கு கை சுத்தம், வாய் சுத்தமாம். கேட்ட பணத்தை கொட்டிக் கொடுத்து விடுகிறார்களாம்.

    அப்படி கொடுத்ததால் தான் மும்பையில் முன்று கிரவுண்டில் சுமார் ரூ. 2 கோடி செலவில் ஆடம்பர பங்களா கட்டி வருகிறார் சதா.மேலும் சென்னை, ஹைதராபாத்திலும் நிலம் வாங்கி போட்டிருக்கிறார்.

    (சதாவுக்கு சில ரியல் எஸ்டேட் முதலைகளுடன் நல்ல நட்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்)

    தெலுங்கில் சம்பளத்தை அள்ளித் தரும் அதே வேளையில் சதாவிடம் இருந்து கவர்ச்சியையும் கறந்து எடுத்துவிடுகிறார்கள்.

    தெலுங்கு தவிர கன்னடத்திலும் மீண்டும் நுழைந்துள்ளார் சதா. அங்கிருந்து தான் இவரது சினிமா பயணம் கிளம்பியது. புதியகன்னட படத்தில் சதாவுக்கு துப்பறியும் பத்திரிகையாளர் வேடமாம்.

    என்ன இனிமே தமிழ் அவ்ளோ தானா என்று ஹைதராபாத்தில் சதாவைப் பிடித்துக் கேட்டபோது அதை அதை வேகமாகமறுத்தார்.

    நான் மும்பை பொண்ணு. ஆனால், தமிழ் மூலம் தான் நான் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனேன். எனவே என்னால்தமிழை மறக்க முடியாது, மறக்கவும் மாட்டேன். தெலுங்கில் அதிக சம்பளம் தருகிறார்கள் என்பதற்காகவோ அல்லது தமிழில்வாய்ப்புகள் குறைந்து விட்ட காரணத்தாலோ நான் ஹைதராபாத்தில் குடியேறவில்லை.

    நல்ல வாய்ப்புகள் வருவதால் தெலுங்கில் நடித்து வருகிறேன். தமிழிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.அப்படித்தான் திருப்பதியில் நடித்து வருகிறேன் என்றார்.

      Read more about: sadha busy in telugu
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X