மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. சாய் தன்ஷிகாவின் கருத்து
Recommended Video
சென்னை : நடிகை சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் .இவர் கடைசியாக இருட்டு படத்தில் சைத்தானாக நடித்திருந்தார்.நாயகி என்றால் இப்படி தான் நடிக்க வேண்டும் என்ற பிம்பத்தை பல முறை உடைத்தவர் சாய் தன்ஷிகா .
சாய் தன்ஷிகா சமீப காலமாக மிக அழகான உடைகளில் போட்டோசூட்களை நடத்தி வருகிறார். அப்படி தற்போது லைட் பச்சை ஆடையில் ஒரு போட்டோசூட் செய்திருக்கிறார் .சாய் தன்ஷிகா சமீப காலமாக நடத்தி வரும் போட்டோசூட்களில் தொடர்ந்து இந்திய உடைகளை வைத்து தான் போட்டோசூட் நடத்தி வருகிறார். இதன் மூலம் இவருக்கு முழு நீள நடிகைக்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது .

சாய் தன்ஷிகா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் ஒரு கருத்தையும் பதிவேற்றி இருந்தார்.அதில் அவர் அனிந்திருந்த ஆடையில் பொன்னிற பறவையின் படம் இருந்தது,அந்த பதிவில் மின்னுவதெல்லாம் பொன்னல்ல சும்மா சொல்கிறேன் என கூறியிருந்தார் .

சமூக வளைத்தலங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சாய் தன்ஷிகா அவ்வப்போது தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார் .மேலும் அதிகப்படியான போட்டோசூட் செய்து அதனையும் பதிவேற்றி வருகிறார் .

சாய் தன்ஷிகா கடந்த வருடத்தில் கன்னட படமான உத்கர்ஷா மூலம் கன்னடத்தில் நாயகியாக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர் தென்னிந்திய நடிகை என்ற அந்தஸ்தை இந்த படத்தின் மூலம் பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











