மாரி 2 பரவாயில்லை, ராணா படத்தில் சாய் பல்லவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா?

By Siva

Recommended Video

மாரி 2 க்குப் பிறகு சாய் பல்லவி எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

ஹைதராபாத்: சாய் பல்லவி ராணா படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவி தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்பது இல்லை. தனக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவர் பல பட வாய்ப்புகளை நிராகரிப்பதால் கெட்டப் பெயரும் எடுத்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். ஒரு தமிழ் ஹீரோயின் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளது இதுவே முதல் முறை என்று கூறி பெருமைப்படுகிறது படக்குழு. இந்த படத்தை பார்த்து மேலும் பல பெண்கள் ஆட்டோ ஓட்ட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நக்சலைட்

நக்சலைட்

தெலுங்கு இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்டாக நடிக்க உள்ளார். 1990களில் நடப்பது போன்ற கதையாம். இந்த படத்தில் நிதின் அல்லது சர்வானந்த் ஹீரோவாக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இறுதியில் ராணா நடிக்கிறார்.

ஆக்ஷன்

ஆக்ஷன்

விரத பர்வம் 1992 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு காதல் படமாம். காதல் காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் ஆக்ஷனுக்கு குறைவே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமம் படத்தை அடுத்து சாய் பல்லவி தெலுங்கு படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

ஒரு ஹீரோயின் நக்சலைட்டாக நடித்தால் இமேஜ் பாதிக்கப்படுமே என்று எல்லாம் சாய் பல்லவி கவலைப்படவில்லை. வரலட்சுமியை போன்றே அவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறார். இல்லை என்றால் ஆட்டோ டிரைவர், நக்சலைட்டாக நடிப்பாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X