சீதையாக நடிப்பது பெரிய பாக்கியம்.. பாலிவுட் சென்ற சாய் பல்லவி நெகிழ்ச்சி பேச்சு
மும்பை: நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே அவர் நடித்த முதல் படமான ஏக் தின் கடந்த மே மாதத்தில் வெளியானது. அடுத்ததாக ராமாயணம் திரைப்படத்தில் சீதை கேரக்டரை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய சாய் பல்லவி பலரது கவனத்தை ஈர்த்தார்.
உதகமண்டலத்தை சேர்ந்த சாய் பல்லவி; வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இங்கே சினிமாவுக்கு வர முயற்சி செய்தார். சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் தோன்றிய அவர்; தாம் தூம் திரைப்படத்தில் சிறிய ரோலை ஏற்றிருந்தது. அதனையடுத்து மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகாமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸர் ஆனது. அவர் ஏற்றிருந்த மலர் டீசசர் கதாபாத்திரம் இளைஞர்களை ரொம்பவே கவர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகை: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மலையாளம், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றை சரியாக பயன்படுத்தி தன்னை டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்திக்கொண்டார். தமிழில் அவர் என்ஜிகே, கார்கி, மாரி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும்; அமரன் திரைப்படம்தான் அவரது மகிமையை முழுமையாக கோலிவுட்டுக்கு உணர்த்தியது என்றே சொல்லலாம். அப்படம் மெகா ஹிட்டானதற்கு சாய் பல்லவி நடிப்புதான் முக்கிய காரணம் என கருதும் பலர் இருக்கிறார்கள்.
தேசிய விருது இல்லை: அதில் அவரது நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட 72வது தேசிய விருதுகளில் பல்லவியின் பெயர் இல்லாதது அவருக்கு மட்டுமின்றி பலருக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். இருப்பினும் அதீத திறமையுடைய சாய்; விரைவில் தேசிய விருதை பெறுவார் என்று நம்பலாம்.
ஹிந்தியில் பல்லவி: இதற்கிடையே தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்த அவர்; ஹிந்தியில் ஏக் தின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அமீர் கான் மகனுக்கு ஜோடியாக நடித்திருந்த அந்தப் படம்; கடந்த மே மாதம் ரிலீஸாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ராமாயணம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் பல்லவி சீதையாகவும், ரன்பீர் கபூர் ராமராகவும் நடித்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க மும்பையில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சாய் பல்லவி பேச்சு: அந்த விழாவில் பட்டு புடவையில் கலந்துகொண்ட சாய் பல்லவி பேசுகையில், "சீதையாக நடிக்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய பாக்கியம். இது சாதாரண கதாபாத்திரம் இல்லை. பல கோடி மக்களின் நம்பிக்கை, பக்தி மற்றும் உணர்வுகளுடன் இனைந்த ஒரு தெய்வீக கேரக்டர். அந்தப் பொறுப்பை உணர்ந்தபடியே இந்த கேரக்டரில் நான் நடித்தேன். எதிர்கால சந்ததியினரும் புரிந்துகொள்ளும்படி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மறுத்த பல்லவி: சீதையின் அமைதி, தியாகம், கருணை, உறுதி உள்ளிட்ட குணங்களை இயல்பாக வெளிப்படுத்த படப்பிடிப்பு சமயத்தில் தியானம் செய்து மனதளவில் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்" என்றார். முன்னதாக, சீதை கேரக்டரில் நடிப்பதற்காக அசைவத்தை தவிர்த்துவிட்டார் என்று அவர் குறித்து தகவல் வெளியானது. ஆனால் அவர் அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

