அங்க காஷ்மீர் பண்டிட்கள்.. இங்க இஸ்லாமியர்கள்.. சாய் பல்லவி ஓப்பன் டாக்!

சென்னை: நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகி உள்ள விராட பர்வம் வரும் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

2க்கும் வித்தியாசம் இல்ல.. Hindutva பற்றி பேசிய Sai Pallavi.. *Politics

ராணா டகுபதி, சாய் பல்லவி, பிரியாமணி, நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குநர் வேணு உடுகலா இயக்கி உள்ளார்.

இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சாய் பல்லவி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

தமிழ் பொண்ணு

தமிழ் பொண்ணு

ஊட்டியில் பிறந்து வளர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் பொண்ணு சாய் பல்லவி, மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் தமிழ் பேசும் மலர் டீச்சராக நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கமல் தயாரிப்பில்

கமல் தயாரிப்பில்

தமிழில் தியா, மாரி 2, என்ஜிகே மற்றும் பாவக் கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். மாவீரன் எனும் டைட்டிலில் விரைவில் அந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷியாம் சிங்கா ராய்

ஷியாம் சிங்கா ராய்

சமீபத்தில் தெலுங்கில் வெளியான நானியின் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் நடிகை சாய் பல்லவிக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் தேவதாசியாக செம போல்டான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார். பிரணவாலயா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் உலகளவில் பாராட்டுக்களை பெற்றது. வயதான தோற்றத்துக்காக பிராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டு நடித்திருப்பார் சாய் பல்லவி.

விராட பர்வம்

விராட பர்வம்

இயக்குநர் வேணு உடுகலா இயக்கத்தில் உருவாகி உள்ள விராட பர்வம் திரைப்படம் வரும் ஜூன் 17ம் தேதி வெளியாகிறது. ராணா டகுபதி மற்றும் பிரியாமணி உடன் இணைந்து வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த ஆச்சார்யா படம் போல இந்த படமும் போராட்டக்காரர்களான நக்சலைட்டுகளின் கதையை சொல்கிறது.

பாடிகார்டான பல்லால தேவா

சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவியை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, அவர்களிடம் இருந்து சாய் பல்லவியை பாதுகாக்க பாடிகார்டாகவே மாறி விட்டார் நம்ம பல்லால தேவா ராணா டகுபதி. அதன் வீடியோவும் நடிகை சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றும் தற்போது டிரெண்டாகி வருகிறது.

டிரெண்டாகும் சாய் பல்லவி

டிரெண்டாகும் சாய் பல்லவி

#SaiPallavi என்கிற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தற்போது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவியின் சமீபத்திய பிரஸ்மீட் புகைப்படங்கள் மற்றும் பேட்டி வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் கொலைகளும், இந்தியாவில் நடக்கும் கொலைகளையும் சம்மந்தப்படுத்தி அவர் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இரண்டுமே தவறு

இஸ்லாமியர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடங்களில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்மீது தாக்குதல் நடத்தி அவரை கொன்றதும் இரண்டுமே தவறான விஷயம் தான். மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என படு போல்டாக அவர் பேசியிருப்பதே இப்படியொரு டிரெண்டிங்கிற்கு காரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X