பாலிவுட் என்ட்ரி.. டோட்டலாக மாறிய சாய் பல்லவி?.. இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்களா?
சென்னை: சாய் பல்லவி கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் வெற்றிக்கொடி நாட்டியது போல் ஹிந்தியிலும் தனக்கான இடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி சாய் பல்லவிக்கு நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் கிளாமர் இல்லாமல்; தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார்.

பிஸி நடிகை: அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டே வந்தார். தமிழிலும் அவர் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மாரி 2, என்ஜிகே ஆகிய படங்கள் சரியாக போகாவிட்டாலும் கார்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் சாய் பல்லவியின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு சில விருதுகளும் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது அமரன்.
அமரன் மெகா ஹிட்: முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தார். முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். படத்தின் மேக்கிங், இசை என அத்தனையும் அட்டகாசமாக இருந்ததன் காரணமாக படம் மெகா ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் மொத்தம் 350 கோடி ரூபாயை வசூலித்தது.
சாய் பல்லவி க்ளாஸ்: இந்தப் படத்தில் அத்தனையையும் மீறி சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காதல் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது நடிப்பு படு க்ளாஸாக இருந்தது என்றும்; அவரது நடிப்பை மட்டும் எடுத்துவிட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை; ஏன் படமே இல்லை என்று ஓபனாக பேசினார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவியின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் சாய் பல்லவி: இதுவரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்துவந்த அவர்; தற்போது ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். அந்தவகையில் ராமாயணம் என்ற ஹிந்தி படத்தில் சீதையாக நடிக்கிறார் அவர். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.அதாவது சீதையாக நடிப்பதன் காரணமாக அசைவ உணவிலிருந்து சைவ உணவுக்கு முழுக்க முழுக்க பல்லவி மாறிவிட்டார் என்றும் தான் எங்கு சென்றாலும் கூடவே ஒரு சமையற்காரரையும் அழைத்து செல்வதாகவும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











