தேம்பி தேம்பி அழுத சாய் பல்லவி... ஆறுதல் கூறி தேற்றிய செல்வராகவன்!
என்ஜிகே படப்பிடிப்பில் தான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி நடிகை சாய் பல்லவி தேம்பி தேம்பி அழுதுள்ளார்.
Recommended Video
சென்னை: தான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி அழுத சாய் பல்லவியை இயக்குனர் செல்வராகவன் தான் ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் நடிக்கும் படம் என்ஜிகே. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
என்ஜிகே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.இதற்காக சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேம்பி அழுத சாய் பல்லவி
விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறி தேம்பி தேம்பி அழுத சாய் பல்லவியை, இயக்குனர் செல்வராகவன் தான் தேற்றியதாகக் கூறினார்.

அர்ப்பணிப்பு
இதுகுறித்து அவர் பேசியதாவது, "சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். நிறைய டேக் வாங்குகிறேனே என நினைத்து அழுவார்.

சரியாக நடிக்கவில்லையா
ஏதாவது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றாலும் அழுவார். இன்னொரு டேக் கொடுத்தால் தான் சிறப்பாக நடிப்பேன் எனக் கூறி தேம்பி தேம்பி அழுவார். அப்போது செல்வராகவன் தான் அவரை ஆறுதல் கூறி தேற்றுவார்.

சாய் பல்லவிக்கு பாராட்டு
இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை பார்ப்பது கஷ்டம். அவரது இந்த உழைப்பும், அர்பணிப்பும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டுவந்திருக்கிறது", என சூர்யா கூறினார்.


Click it and Unblock the Notifications











