எல்லா பாட்டுக்கும் ஒரே ஸ்டெப் போட்டு ஏமாத்துறாங்க.. சாய் பல்லவியை திடீரென அட்டாக் செய்யும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை சாய் பல்லவிக்கு கடந்த ஆண்டு அமரன் படத்தை பார்த்துவிட்டு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்துக் கொண்டே இருந்தன. அதே நேரத்தில் அவர் படம் வெளியாகும் போதெல்லாம் ஏதாவது சர்ச்சைகள் அவரை சுற்றி வட்டமிடுவதும் வாடிக்கையாகி விட்டது. சாய் பல்லவியின் வளர்ச்சியை பிடிக்காத சில நடிகைகள் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி அவருக்கு எதிரான ட்ரோல்களை பரப்புவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இதே பிரச்சனை அனைத்து நடிகைகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. நாக சைதன்யாவுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நாக சைதன்யாவுடன் இணைந்து விசாகப்பட்டினம், சென்னை, மும்பை என சுற்றி சுற்றி படத்தை பான் இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறார்.

sai pallavi heroine

ஏற்கனவே உலக மேப்பில் இருந்து பாகிஸ்தான் நாடே இருக்காது என நாக சைதன்யா பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவியின் நடனம் குறித்த ட்ரோல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

ராஷ்மிகாவை தொடர்ந்து: பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றியை பெற்று வருகின்றனர். ரன்பீர் கபூர் உடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து அனிமல் படத்தில் நடித்து பாக்ஸ் ஆபிஸை நிரப்பிய நிலையில், அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதா தேவியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. நாக சைதன்யாவுடன் அவர் நடித்துள்ள தண்டேல் படம் அடுத்த வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

ஒரே ஸ்டெப் மட்டுமே: தயவு செய்து சாய் பல்லவியின் நடன இயக்குநரான சேகர் மாஸ்டரை அவரது படங்களில் இருந்து தூக்கிவிட்டு புதிதாக வேறு ஒரு நடன இயக்குநரை புக் செய்ய வேண்டும். அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான நடன அசைவுகளையே வேறு வேறு உடைகளை அணிந்துக் கொண்டு வேறு வேறு லொகேஷன்களில் ஆடி ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் சாய் பல்லவி என நெட்டிசன்கள் சிலர் அவரது டான்ஸை கலாய்த்து ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சூப்பரா ஆடுவாரு: ரவுடி பேபி பாடலில் எல்லாம் சாய் பல்லவியின் நடனம் வேறலெவலில் இருந்தது. ஆனால், சாய் பல்லவி ஏன் ஒரே டான்ஸ் மாஸ்டரை சமீப காலமாக நம்பியிருக்கிறார் என்றும் அவரது நடனத்திறமையை வெளிப்படுத்தினால் தான் ரசிகர்களை கவர முடியும் என்றும் கூறுகின்றனர். சிலர், அவருக்கு இந்த ஸ்டெப்ஸ் தான் தெரியும் என்றும் அதனால் தான் எல்லா படங்களிலும் அதே மாதிரி போட சொல்கிறார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X