அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறினேனா?.. சட்டப்படி சந்திப்பீர்கள்.. சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை!

சென்னை: சாய் பல்லவி கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியை தாண்டி சாய் பல்லவியின் நடிப்பு ஏகத்துக்கும் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் ஹிந்தியில் ராமாயணம் படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்துக்காக அவர் அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாறிவிட்டார் என்று தகவல்கள் பரவின. தற்போது அதுகுறித்து அவர் காட்டமான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதில் அவரால் டைட்டிலை அடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு அமைதியாக இருந்த அவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிரேமம் படத்துக்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியானார் அவர்.

sai pallavi amaran ramayana

தமிழில் சிறப்பு: மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி கோலிவுட்டிலும் தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தினார். கிளாமர் ரோல் எதுவும் ஏற்காமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தெளிவாக இருக்கிறார் அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் நடித்த படங்களில் சாய் பல்லவியின் கேரக்டர் எப்போதும் முக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் சாய் பல்லவி: தமிழில் அவருக்கு ஏற்கனவே நல்ல பெயர்தான் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் அந்தப் பெயரை மேலும் உயரத்துக்கு கொண்டு சென்றது. ஒவ்வொரு சீனிலும் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் முழுவதும் சாய் பல்லவியின் ரோல் சம்பந்தமான ரீல்ஸ்கள்தான் அதிகமாக பரவின. அதுமட்டுமின்றி அமரன் வெற்றியால் சாய் பல்லவியின் சம்பளமும் ஏறியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹிந்தியில் சாய் பல்லவி: இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கலக்கிவந்த அவர் இப்போது ஹிந்தியிலும் தடம் பதித்திருக்கிறார். அந்தவகையில் அவர் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடிக்கிறார். இப்படத்திலும் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு; பான் இந்தியா ஹீரோயினாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரவிய தகவல்: சூழல் இப்படி இருக்க ராமாயணம் படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிப்பதால் அவர் குறித்து ஒரு தகவல் பரவியது. அதாவது, சீதையாக நடிப்பதன் காரணமாக அசைவ உணவை நிறுத்திவிட்டு முழுவதும் சைவ உணவுக்கு அவர் மாறிவிட்டார். வெளியூர் சென்றால்கூட சமையற்காரர் ஒருவரை உடன் அழைத்து செல்கிறார். அவர் சைவ உணவை சமைத்து தருகிறார். ஹோட்டலில்கூட சாப்பிடுவதில்லை என்று கூறப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி இப்படி மாறிட்டாங்களே என்று பேச ஆரம்பித்தார்கள்.

சாய் பல்லவி காட்டம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறார் அவர். அவர் போட்டிருக்கும் ட்வீட்டில், "வதந்திகள், பொய்கள் உள்ளிட்டவைகளை பார்க்கும்போது பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாகவே இருந்திருக்கிறேன். உண்மை எதுவென்று கடவுளுக்கு தெரியும். ஆனால் வதந்திகளும், பொய்களும் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. எனவே எதிர்வினையாற்றும் நேரம் வந்துவிட்டது. முக்கியமாக எனது படங்களின் ரிலீஸ், அறிவிப்பு வரும் சமயங்களில் இதுபோன்று நடக்கிறது. அடுத்த முறை ஏதேனும் இப்படி ஒரு வதந்தியோ, பொய்யோ ஊடகங்களில் வந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை என்னிடமிருந்து வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X