Sai Pallavi: ’என்னாச்சு’ க்யூட்டாக கேட்ட சாய் பல்லவி.. சிறந்த நடிகை விருது வாங்கிய பின் நடந்த சம்பவம்

சென்னை: 22வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் நடிகை சாய் பல்லவிக்கு, அமரன் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. படம் வெளியானபோதே, பெரும்பாலான ரசிகர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை சாய் பல்லவியின் நடிப்பினைப் பாராட்டினார்கள். குறிப்பாக ஒரு சிலர் சாய் பல்லவிக்கு தேசிய விருதே கொடுக்கலாம் எனத் தெரிவித்தனர். இப்படியான நிலையில், 22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சாய் பல்லவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அமரன் படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்தது. முகுந்த வரதராஜன் கதாபாத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அவரது மனைவியான இந்து ரெபக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்தார்.

sai pallavi amaran 22nd ciff

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் ஹிட் படமாக மாறியது. படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூபாய் 320 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படியான நிலையில் 22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை வாங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாய் பல்லவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சாய் பல்லவி: குறிப்பாக அவர் பேசும்போது, “22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது கொடுத்துள்ளார்கள், மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஏனென்றல், இந்த ஆண்டில் அதிகப்படியான நல்ல படங்கள் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது, அப்படியான நிலையில் அமரன் படத்திற்காக எனக்கு விருது வழங்கப்பட்டதை பாக்கியமாகக் கருதுகின்றேன். ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி, விருதுகளை விடவும், அவர்கள் காட்டும் அன்பு எமோஷ்னல் அடையச் செய்கின்றது.

முகுந்த் குடும்பம்: இது எல்லாவற்றிக்குமே காரணம், முகுந்த் சாரின் குடும்பம் மற்றும் அவரது மனைவிதான். அவர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து உலகத்திற்கு காட்ட, அனுமதி கொடுத்ததால்தான் இவையெல்லாம் சாத்தியமானது. இந்த ஒரு குடும்பம், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை மூலம், பல ராணுவ வீரர்களின் வாழ்க்கையை காட்ட முடிந்தது. அதற்கு, ராஜ்குமார் பெரியசாமி போன்ற நல்ல இயக்குநர் இருந்ததால்தான் சாத்தியமானது.

{video1}

க்யூட்: இதுபோன்ற படத்தில் நான் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகின்றேன்” எனக் கூறினார். இதற்கு முன்னதாக, விருது வாங்கிய பின்னர் செய்தியாளர்கள், சாய் பல்லவியை நோக்கிச் சென்றார்கள், செய்தியாளர்கள் குழுமியதைப் பார்த்த சாய் பல்லவி ஒரு நிமிடம் பயந்தே விட்டார், உடனே செய்தியாளர்களை நோக்கி, என்னாச்சு?.. என்னாச்சு... என்ன வேணும் என க்யூட்டாக கேள்வி எழுப்ப, இது தொடர்பான வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X