இதுல யார் சாய் பல்லவி.. ரசிகர்களை ஒரேயடியாக கன்ஃப்யூஸ் செய்த ரவுடி பேபியின் குடும்ப புகைப்படம்!

சென்னை: நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ரசிகர்களை வெகுவாக குழப்பி உள்ளது.

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி.

சமீபத்தில், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

2005ல் வெளியான கஸ்தூரி மான் மற்றும் ஜெயம் ரவியின் தாம் தூம் உள்ளிட்ட திரைப்படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்திருப்பார் சாய் பல்லவி. பிரபுதேவாவின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் 2015ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தென்னிந்தியா முழுவதும்

தென்னிந்தியா முழுவதும்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ஒளிர்ந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்ஜிகே, பாவக் கதைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வசூல் வேட்டை

வசூல் வேட்டை

டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான ஃபிடா படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி மீண்டும் அவர் இயக்கத்தில் உருவான லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

Recommended Video

படம் பாத்துட்டு என் அம்மா சொன்னது | Actress Sai Dhanya interview | Filmibeat Tamil
மீண்டும் தனுஷ் உடன்

மீண்டும் தனுஷ் உடன்

மாரி 2 படத்தில் தனுஷ் உடன் இணைந்து இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. சேகர் கம்முலா இயக்கத்தில் தொடர்ந்து 2 படங்களில் நடித்த சாய் பல்லவி அடுத்ததாக அவர் தனுஷை இயக்க உள்ள படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சு அசல்

அச்சு அசல்

நடிகை சாய் பல்லவியும் அவரது தங்கை பூஜா கண்ணனும் பார்க்க அச்சு அசல் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்பது ரசிகர்கள் அறிந்த ஒன்று தான். ஆனால், தற்போது வெளியாகி உள்ள சாய் பல்லவியின் குடும்ப படத்தை பார்த்தால் இதில், யார் சாய் பல்லவி என்ற சந்தேகமே வந்துவிடும் அளவுக்கு இருவரும் அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல உள்ளனர்.

விராட பர்வம்

விராட பர்வம்

நானியுடன் ஷியாம் சிங்கா ராய் மற்றும் ராணா டகுபதி உடன் விராட பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி. இயக்குநர் வேணு உடுகலா இயக்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் கதையாக உருவாகி உள்ள விராட பர்வம் திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X