சிம்பிளாக.. அழகாக.. சாய் பல்லவி..புகைப்படங்களை பதிவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை : சாய் பல்லவி ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
Recommended Video
சாய் பல்லவி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடனத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்வசப்படுத்தியவர். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பை விட நடனம் அனைவராலும் பாராட்டபடுகிறது. அவர் நடித்து வெளிவந்த படம் அனைத்தும் படங்களும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது .

சாய் பல்லவி நடனம் ஆடிய "ரவுடி பேபி"பாடலுக்கு நடனம் ஆடாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த பாட்டின் நடன அசைவுகளும் ஹிட். மேலும், யூ டியூப்பில் அதிக விவஸ் பார்த்த பாடல் என்ற பெருமையும் அந்த பாடலுக்கு உண்டு. இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து ஹீரோயின்களும் தனது புகைப்படத்தை விதவிதமாக எடுத்து வைரலாகி வரும் சமயத்தில். சாய் பல்லவியின் ரசிகர்களே த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் ..
அந்த புகைப்படத்தில் வழக்கம் போல் சிம்பிளாகவும், அழகாகவும் இருக்கிறார் சாய். இந்த ஊரடங்கில் ஹீரோயின்களின் கிளாமர் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த நமக்கு சாய் பல்லவி ரசிகர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் கவர்ச்சி ஏதும் இல்லாமல் சிம்பிள் அண்ட் டீசென்ட்டாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போட்டோக்கள் கவர்ச்சியாக வெளியிட்டு அதை வைரல் ஆக்குவது ஹீரோயின்களின் பார்முலா. இந்த ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாத சில நடிகைகள் கிளாமர் என்ற பெயரில் மிகவும் மோசமான புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்ஸ்களின் கிண்டலுக்கும் ,கேலிக்கும் ஆளாகிவருகின்றனர்.

ஆனால் சாய் பல்லவியின் ரசிகர்களோ பல இன்ஸ்டா பேஜ் நடத்தி வருகின்றனர் அதில் அவர்கள், சிம்பிளாக. அழகான, அடக்கமான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு ஏதும் இன்றி ரசிக்கும் படியான போடோஸாக இருக்கிறது. எப்போதும் ஓபன் ஹேரில் இருக்கும் சாய் பல்லவி லைக்ஸ் அள்ளுகிறார். நடனம் ஆடுவது போல் இருக்கும் அவரது போட்டோ ஒன்று கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் ரசிகர்கள் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றதுடன் பாசிட்டிவ் கமெண்ட்ஸும் வந்துகொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











