வேற எந்த ஹீரோயினுக்கும் கிடைக்கலையே... நம்ம 'ரவுடி பேபி' சாய் பல்லவிக்கு இப்படியொரு பெருமை

By

Recommended Video

மேசையில் நண்பருடன் தாளம் போட்டு விளையாடும் சாய் பல்லவி - க்யூட் வீடியோ

சென்னை: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தொகுப்பில், நடிகை சாய் பல்லவி பெயர் இடம்பெற்றுள்ளது.

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதில் இவர் நடனமும் மலர் டீச்சர் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர்.

தனுஷூடன் மாரி 2

தனுஷூடன் மாரி 2

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த அவர், பின்னர் தெலுங்குக்குச் சென்றார். அங்கு அவர் நடித்த ஃபிடா படம் வரவேற்பைப் பெற்றது. இதனால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து தனுஷூடன் 'மாரி 2' படத்தில் நடித்தார். இதை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார்.

ரவுடி பேபி சாதனை

ரவுடி பேபி சாதனை

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவாவின் நடன அமைப்பில், தனுஷூடன் சாய் பல்லவி ஆடிய இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமானது. இதில் அவர்கள் நடனமும் சிறப்பாக அமைந்திருந்தது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனைப் படைத்தது.

போர்ப்ஸ் இந்தியா

போர்ப்ஸ் இந்தியா

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது, வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை. வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட லிஸ்டில் இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர்.

பெருமைப்பட்டுள்ளேன்

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், இதன் மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிராகரித்தார்

நிராகரித்தார்

ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X