நாக சைதன்யாவின் 'லவ் ஸ்டோரி'க்கு நடனம் அமைக்கிறாரா 'ரவுடி பேபி' சாய் பல்லவி? பரபரப்பில் டோலிவுட்!

By

சென்னை: பிரபல நடிகை சாய் பல்லவி பாடல் ஒன்றுக்கு நடனம் அமைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான, யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர், சாய் பல்லவி.

சிறந்த நடன கலைஞரான அவர், தெலுங்கு சேனல் ஒன்றில் தி அல்டிமேட்டு டான்ஸு என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று புகழ்பெற்றார்.

மலர் டீச்சர் கேரக்டர்

மலர் டீச்சர் கேரக்டர்

பின்னர், பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதில் இவர் நடனமும் மலர் டீச்சர் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த அவர், பின்னர் தெலுங்குக்குச் சென்றார். அங்கு அவர் நடித்த ஃபிடா படம் வரவேற்பைப் பெற்றது.

தனுஷூடன் மாரி 2

தனுஷூடன் மாரி 2

இந்தப் படத்தில் 'ஒச்சிந்தே' என்ற பாடலில் அவரது நடனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதையடுத்து தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ் தெலுங்கில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து தனுஷூடன் 'மாரி 2' படத்தில் நடித்தார். இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார்.

ரவுடி பேபி சாதனை

ரவுடி பேபி சாதனை

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவாவின் நடன அமைப்பில், தனுஷூடன் சாய் பல்லவி ஆடிய இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமானது. இதில் அவர்கள் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாக ரவுடி பேபி, சாதனைப் படைத்தது.

லவ் ஸ்டோரி

லவ் ஸ்டோரி

இந்நிலையில் ஃபிடா படத்தை இயக்கிய, சேகர் காமுலா லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாக சைதன்யா ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பெற இருக்கும் ஒரு பாடலுக்கான நடனத்தை அமைக்கும்படி நடிகை சாய் பல்லவியிடம் இயக்குனர் சேகர் காமுலா கேட்டுள்ளாராம். இதையடுத்து அந்தப் பாடலுக்கு நடனம் அமைக்க இருப்பதாக தெலுங்கு சினிமாவில் கூறப்படுகிறது. இதை அவரோ, படக்குழுவோ உறுதிப்படுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X