நான் அப்படித்தான்.. அதற்கு அதுதான் பெயர்.. ஓபனாக போட்டுடைத்த சாய் பல்லவி

சென்னை: சாய் பல்லவி கடைசியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவர் வெற்றிக்கொடி நாட்டியது போல் ஹிந்தியிலும் தனக்கான இடத்தை பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில்கூட அவரது போட்டோஷூட தொடர்பான புகைப்படங்கள் என்று சில வெளியாகி ட்ரெண்டாகின. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நீலகிரியை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்தப் படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமின்றி அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது. மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் கிளாமர் இல்லாமல்; தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார்.

Sai Pallavi Open Talks about Her Biopic Name
Photo Credit:

பல்லவி டாப்: அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டே வந்தார். தமிழிலும் அவர் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மாரி 2, என்ஜிகே ஆகிய படங்கள் சரியாக போகாவிட்டாலும் கார்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் சாய் பல்லவியின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு சில விருதுகளும் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது அமரன்.

வர்கீஸ் மெகா ஹிட்: முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தார். முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். படத்தின் மேக்கிங், இசை என அத்தனையும் அட்டகாசமாக இருந்ததன் காரணமாக படம் மெகா ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் மொத்தம் 350 கோடி ரூபாயை வசூலித்தது.

சாய் பல்லவி க்ளாஸ்: இந்தப் படத்தில் அத்தனையையும் மீறி சாய் பல்லவியின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காதல் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது நடிப்பு படு க்ளாஸாக இருந்தது என்றும்; அவரது நடிப்பை மட்டும் எடுத்துவிட்டால் இந்தப் படத்தில் ஒன்றுமே இல்லை; ஏன் படமே இல்லை என்று ஓபனாக பேசினார்கள் ரசிகர்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சாய் பல்லவியின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் இன்டஸ்ட்ரியில் பேச்சு எழுந்திருக்கிறது.

சாய் பல்லவி பேட்டி: இதற்கிடையே சாய் பல்லவி ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படத்தில் சீதை கேரக்டரை பல்லவி ஏற்றிருக்கிறார். பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்துக்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

பயோபிக்: அவர் அளித்த பேட்டியில், "என்னை பற்றிய பயோபிக் உருவாக்கி அதற்கு பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் 50 Shades of Pallavi என்று வைப்பேன். ஏனெனில் நாம் ஒவ்வொருவரிடமும் வேறு மாதிரிதான் இருப்போம். நானும் அப்படித்தான். நண்பர்களுடன் இருக்கும்போது ஒருமாதிரி இருப்பேன். அதேசமயம் சினிமா துறையில் வேறு மாதிரி இருப்பேன். குடும்பத்தில் வேறு மாதிரி இருப்பேன். அதனால்தான் அந்தப் பெயரை நான் தேர்ந்தெடுத்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X