Sai Pallavi - பீரியட்ஸ் டைமில்தான் ரௌடி பேபி டான்ஸ் ஆடினேன் - சாய் பல்லவி ஓபன் டாக்

சென்னை: Sai Pallavi (சாய் பல்லவி) ரௌடி பேபி பாடலுக்கு ஆடும்போது பீரியடில் இருந்ததாக சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் சாய் பல்லவி. தனியார் தொலைக்காட்சி நடத்திய நடன போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்தவர் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ததது.

Sai Pallavi Opens up About Her Rowdy Baby Dance Experience

முன்னணியில் சாய் பல்லவி: அதனைத் தொடர்ந்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி மாரி 2, என்.ஜி.கே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் கார்கி திரைப்படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவியின் கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி நானியுடன் ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து அங்கும் முன்னணி கதாநாயகியாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார்.

நடனத்தில் கில்லி: சாய் பல்லவி இப்போது கதாநாயகியாக இருந்தாலும் தொடக்கத்தில் டான்ஸ் தொடர்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவர். அந்த ஷோவில் நடனத்தில் பின்னி பெடல் எடுத்தவர். ஆனால் நடனத்திற்காக பிரத்யேகமாக எந்த வகுப்புக்கும் செல்லாமல் மாதுரி தீட்சித் உள்ளிட்டோரின் நடனத்தை பார்த்து தானாகே கற்றுக்கொண்டு நடனத்தில் கலக்கியவர்.

Sai Pallavi Opens up About Her Rowdy Baby Dance Experience

மாரி 2 ரௌடி பேபி: சாய் பல்லவி பல படங்களில் நடனத்தில் கலக்கியிருந்தாலும் தனுஷுடன் மாரி 2 படத்தில் ரௌடி பேபி படத்தில் நடனத்தில் மெர்சல் ஆக்கியிருப்பார். பிரபுதேவா அமைத்த கஷ்டமான நடன அமைப்பை அசால்ட் செய்திருப்பார் பல்லவி. தனுஷும் ஈடு கொடுத்து ஆடியிருந்தாலும் ஸ்க்ரீனில் ரசிகர்களின் கண்கள் சாய் பல்லவியின் நடனத்தை நோக்கியே இருந்தது.

பீரியட்ஸில் ஆட்டம்: இந்நிலையில் அந்தப் பாடலில் நடனமாடியபோது சாய் பல்லவி பீரியட்ஸில் இருந்தாராம். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் ஒரு க்ளாசிக்கல் பாடலுக்கு நடனம் ஆடியிருப்பேன். அந்தப் பாடலை தவிர்த்து மற்ற பாடல்களுக்கு ஆடும்போது நான் பீரியட்ஸில்தான் இருந்திருக்கிறேன். மாரி 2வில் ரௌடி பேபி பாடலுக்கு ஆடும்போதும் நான் பீரியட்ஸில்தான் இருந்தேன்.

Sai Pallavi Opens up About Her Rowdy Baby Dance Experience

டயர்ட் ஆகிவிடுவேன்: மனதுக்கு பிடித்த விஷயத்தை செய்யும்போது கஷ்டம் தெரியாது. இருந்தாலும் நடனம் ஆடி முடித்துவிட்டு அடுத்த இரண்டு மூன்று நாள்கள் பெரிதும் டயர்ட் ஆகி படுத்துவிடுவேன். அப்போது எனது அப்பா வந்து என்னுடைய கால்களை பிடித்துவிடுவார்" என கூறியிருந்தார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், யப்பா பீரியட்ஸ் டைம்லயே இப்படி நடனம் ஆடுகிறார் என்றால் சாதாரண நாளில் எப்படி நடனம் ஆடுவார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இதற்கிடையே, புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும், படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக சாய் பல்லவி இருப்பார் எனவும், இதற்காக அவர் பத்து நாள்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X