»   »  விக்ரம் படத்திலிருந்தும் விலகினார் சாய் பல்லவி... காரணம் தெரியுமா?

விக்ரம் படத்திலிருந்தும் விலகினார் சாய் பல்லவி... காரணம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரேமம் புகழ் சாய் பல்லவியை தமிழுக்கு 'வா வா' வரவேற்கிறார்கள். ஆனால் அவரோ பெரிய பெரிய வாய்ப்புகளைக் கூட உதறித் தள்ளிவிடுகிறார்.

முதலில் மணி ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை கண்டு கொள்ளவே இல்லை.

Sai Pallavi opts out Vikram movie

அடுத்து 'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமானார். இப்போது அந்தப் படத்திலிருந்தும் விலகியுள்ளாராம்.

காரணம்....

விஜய் சந்தர் படம்தான் முதலில் ஆரம்பிப்பதாக இருந்ததாம். ஆனால் திடீரென கெளதம் மேனன் படத்துக்கு விக்ரம் முன்னுரிமை அளித்துவிட்டார். இதனால் விஜய் சந்தர் படம் லேட்டாகிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் சாய் பல்லவி விலகிக் கொண்டார் என்கிறார்கள்.

'இன்னும் சிலரோ, விக்ரம் படத்தில் நடிப்பது கொஞ்சம் டார்ச்சர் சமாச்சாரம்... பாத்து இருந்துக்கம்மா' யாரோ சாய் பல்லவி மனசைக் கலைத்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது.

அதே நேரம் விஜய் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.

English summary
Premam fame Sai Pallavi has opted out Vikram - Vijay Chander movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil