மீண்டும் அண்ணன்-தங்கை செண்டிமெண்டா… பிரபல நடிகருக்கு தங்கையாகும் சாய் பல்லவி!

சென்னை : அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அண்ணன், தங்கை செண்டிமெண்ட் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளன.

சாய்பல்லவி தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.

சாய் பல்லவி

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் அறிமுகமான முதல் படமே அதிரி புதிரி வெற்றி பெற்றதால் அம்மணி அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமானார். தொடர்ந்து அடித்த ஹிட் காரணமாக சாய் பல்லவிக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது.

தெலுங்கில் பிஸி

தெலுங்கில் பிஸி

அதன் காரணமாக தற்போது அம்மணி தான் தெலுங்கில் டாப் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் அடித்த சூப்பர் ஹிட் காரணமாக சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்த சாய்பல்லவி நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

தங்கையாக

தங்கையாக

இந்நிலையில், தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் சாய் பல்லவி அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சாய் பல்லவிக்கு மகேஷ்பாபுவின் தங்கையாக நடிக்க விருப்பம் இல்லை என்றும், இருப்பினும் திரிவிக்ரம் படத்தை தவறவிட விரும்பவில்லை என்பதால், தங்கையாக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Recommended Video

Sai Pallavi எடுத்த அதிரடி முடிவு!! பட வாய்ப்பு போனாலும் பரவாயில்லை? | Samantha, Pooja Hedge
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

தமிழ் படமான வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சாய் பல்லவி பலத்திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது, தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X