சாய் பல்லவியை துரத்திய ரசிகர்கள்.. ஏர்போர்ட்டில் இப்படி ஓடுறாங்களே.. என்ன நடந்தது?
சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட்டில் அவர் நடித்துவரும் ராமாயணம் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. தமிழிலும் அவர் D55 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதன் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. இந்நிலையில் ஏர்போர்ட்டில் சாய் பல்லவி ஓடிய வீடியோ ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். ரொம்பவே கேஷுவலான காஸ்ட்யூமில் எதார்த்தமான நடிகையாக ஜொலித்தார். அப்படத்தின் வெற்றிக்கு அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தரமாக பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக அறிமுகமான சில காலத்திலேயே குறிப்பிட்ட அளவுக்கான ரசிகர் வட்டத்தையும் பெருக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சாய் பல்லவி: மலையாளத்துக்கு பிறகு தமிழில் மாரி 2 திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் தோல்வியடைந்தாலும் வழக்கம்போல் தனது பவர்ஃபுல்லான ஃபெர்பார்மையும், நடனத்தையும் அதில் வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். அதுவும் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. இப்படி தொடர்ந்து கோலிவுட்டில் சறுக்கிக்கொண்டிருந்த அவருக்கு கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது.

பாலிவுட்டுக்கும் சென்ற பல்லவி: மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளை தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். முதலில் அவர் ராமாயணம் படத்தில்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அது ரிலீஸாக தாமதமாகியிருக்கிறது. அதற்கு முன்னதாகவே ஏக் தின் என்ற படம் மே ஒன்றாம் தேதி வரவிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எப்படி தனக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதேபோன்ற ஒரு ரெஸ்பான்ஸை பாலிவுட்டிலும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோ கிளாமர்: அவரது இன்னொரு ஸ்பெஷலாக பார்க்கப்படுவது நோ கிளாமர் பாலிஸி. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக, அமரன் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு காரணமே சாய் பல்லவியின் அபாரமான நடிப்புதான்; அவர் மட்டும் இல்லையென்றால் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டெல்லாம் ஆகியிருக்காது என்ற கருத்துடன் பல பேர் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அதில் அவர் எல்லோரையும் கவர்ந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ட்ரெண்டாகும் வீடியோ: அடுத்ததாக அவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக D55 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் ஏர்போர்ட்டில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுக்க முயன்றார்கள். அதற்கு அவரோ, 'இங்கே புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கார் அங்கே நிற்கிறது. அங்கே செல்ல வேண்டும்' என சொல்ல; இவர்கள் வழி விடுவதாக தெரியவில்லை. இதனையடுத்து அங்கிருந்து வேறு வழியாக சுற்றி தனது காரை நோக்கி ஓடினார். அவருக்கு பின்னால் மொபைல் ஃபோனை தூக்கியபடி ரசிகர்களும் ஓடினார்கள். தற்போது இந்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











