»   »  ஆயிரெத்தட்டு கன்டிஷன் போடும் சாய் பல்லவி: இயக்குனர்கள் அதிர்ச்சி

ஆயிரெத்தட்டு கன்டிஷன் போடும் சாய் பல்லவி: இயக்குனர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாய் பல்லவி விதிக்கும் நிபந்தனைகளால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

மலையாள படமான பிரேமத்தில் மலர் டீச்சராக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி. அவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Sai Pallavi's conditions shocks directors

சாய் பல்லவியை தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சாய் பல்லவி பல நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கிளாமராக உடை அணிய மாட்டேன், ஹீரோவுடன் டப்பிங் சீன்கள் அதிகம் இருக்கக் கூடாது, படப்பிடிப்பு தேதிகளை முன்கூட்டியே எனக்கு தெரிவிக்க வேண்டும் என பல நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

இது என்னடா இந்த பொண்ணு, இப்ப தான் நடிக்கவே வந்திருக்கு அதற்குள் ஆயிரத்தெட்டு கன்டிஷன் போடுதே என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எரிச்சல் அடைந்துள்ளார்களாம்.

English summary
Buzz is that Sai Pallavi is putting forth conditions to act in movies which shocks producers and directors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil