'அந்த 2' மட்டும் நான் செய்யவே மாட்டேன்: சாய் பல்லவி அடம்
Recommended Video

சென்னை: முத்தக் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்கிறார் சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் அராத்து ஆனந்தியாக ஆட்டம் போட்டிருந்தார்.

படத்தில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம் அவர். இது குறித்து அவர் கூறியதாவது,
நான் படங்களில் நடிப்பதற்காக மருத்துவர் பணியை விட்டுவிட்டு வந்துள்ளேன். அதனால் அதை நியாயப்படுத்தும் வகையில் நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். குட்டி குட்டி உடை அணிந்து என்னால் நடிக்க முடியாது.
அரைகுறை ஆடை அணிந்து நடிப்பதற்கு எதிரானவள் நான். என்னால் அது முடியாது. என் படத்தை என் மொத்த குடும்பமும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் லிப் டூ லிப் காட்சிகளில் நடித்து அவர்களை நெளிய வைக்க விரும்பவில்லை. முத்தக் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











