அடிக்கடி புடவையில் வருவதற்கு இதுதான் காரணம்.. சாய் பல்லவி சொன்ன செம விஷயம்

சென்னை: பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். க்யூட்டான எக்ஸ்பிரெஷன், சிறந்த நடிப்பு, அளவான அழகு என அவர் தனக்கான பாதையில் சிறப்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதிலும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்திருக்கிறது.

ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர் சாய் பல்லவி. நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானார். அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக மலர் டீச்சராக சாய் பல்லவி தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவரைப் பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுவா முதல் படம் என்று ஆச்சரியம்தான் பட்டார்கள். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

sai pallavi amaran

சிறந்த டான்ஸர்: சாய் பல்லவி சிறந்த நடிகை என்பது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த டான்ஸரும்கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி ஷோவில்கூட அவர் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால் அந்தப் ஷோவில் அவர் டைட்டில் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலம் எப்படியோ அவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டது. ரியாலிட்டி ஷோவில் கிடைக்காத பிரபல்யம் சாய் பல்லவிக்கு சினிமாவின் மூலம் கிடைத்துவிட்டது. அதற்கு பல்லவியின் திறமைதான் முதல் காரணம்.

போலிகளை உடைத்த நாயகி: அதேபோல் சாய் பல்லவியிடம் இன்னொரு ஸ்பெஷலாக ரசிகர்கள் பார்ப்பது அவரது எதார்த்ததைத்தான். பொதுவாக நடிகைகள் பெரும்பாலானோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஓவர் மேக்கப்போட்டு வருவார்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப்பை அளவாக போட்டுக்கொண்டு அழகாக வருவார். அதனாலேயே பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

வரிசையாக வாய்ப்புகள்: மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி; அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி படம் வெளியாகி மெகா ஹிட்டடித்திருக்கிறது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில் சாய் பல்லவி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

சாய் பல்லவியின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் புடவையில் அடிக்கடி வருவதற்கு காரணம் அதுதான் வசதியாக இருக்கிறது. ஏனெனில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ, ஈவெண்ட்டிலோ கலந்துகொள்ளும்போது நமது துணி எப்படி இருக்கிறது என்பதிலேயே பாதி கவனம் போய்விடும். பிறகு என்ன பேச வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் நான் புடவையில் வந்தால் வசதியாக இருப்பதால் துணி எப்படி இருக்கிறது என்பதில் போகும் கவனம் குறைந்து என்ன பேச வேண்டும் என்பதில் அதிக கவனம் போகும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X