Sai Pallavi: அக்கா இருக்கும் போதே அவசரப்பட்ட சாய் பல்லவி தங்கச்சி.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானா?
சென்னை: கோத்தகிரியில் பிறந்து வளர்ந்து நடனக்கலையில் சிறந்து விளங்கி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவிக்கு தமிழ் சினிமாவுக்கு முன்னதாக மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடிக்கும் ஜாக்பாட் அடித்தது. பிரேமம் படத்திலேயே தமிழ் பேசும் டீச்சராகத்தான் அறிமுகமாகியிருப்பார்.
அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் சாய் பல்லவி அடுத்து சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவியின் ட்வின் சிஸ்டரான பூஜாவும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், அவருக்கு முதல் படமே சிறப்பாக அமையவில்லை. அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகிய அவர் தற்போது நிச்சயதார்த்தமே செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

சாய் பல்லவி தங்கச்சி: கஸ்தூரி மான், தாம் தூம் படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டகா நடித்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்து தனுஷின் மாரி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய ரெக்கார்டு படைத்தார். சூர்யாவுடன் என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக விரைவில் எஸ்கே 21 படத்தில் மிரட்ட காத்திருக்கிறார். அவரது தங்கை பூஜா கண்ணனும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சித்திரை செவ்வானம்: சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் படத்தில் சமுத்திரகனியின் மகளாக பூஜா கண்ணன் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகமானார். கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு ஏற்படும் பாலியல் தொல்லை காரணமாக அவரது அப்பா சமுத்திரகனி பழிவாங்கும் கதையாக அந்த படத்தை ஸ்டன்ட் சில்வா உருவாக்கி இருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பை வெளிக்காட்டினாலும் அந்த படம் அவருக்கு பெரிதாக ஓடவில்லை.
காதலருடன் போஸ்: 2021ம் ஆண்டு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் பூஜா கண்ணன். அக்கா சாய் பல்லவி போல சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்த பூஜா கண்ணன் கடந்த வாரம் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் காதலர் இவர் தான் வருங்கால கணவர் இவர் தான் என வினீத் என்பவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு: அக்கா சாய் பல்லவி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் நிலையில், தங்கை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம் தை மாதத்தின் முதல் முகூர்த்தத்தில் நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஹந்தி போட்ட கையுடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.
சந்தோஷத்தில் சாய் பல்லவி: காஜல் அகர்வாலுக்கு முன்னதாக அவரது தங்கை நிஷா அகர்வாலும் சினிமாவில் சாதிக்க முடியாத நிலையில், சட்டென திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை பெற்றுக் கொண்டார். அதே போலத்தான் தற்போது சாய் பல்லவிக்கு முன்னதாக அவரது தங்கை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், சாய் பல்லவி செம சந்தோஷத்தில் நடனமாடிய வீடியோவும் தீயாக பரவி வருகிறது. 31 வயதான சாய் பல்லவிக்கு எப்போ திருமணம் என நிச்சயதார்த்தத்துக்கு வந்த உறவினர்கள் பலரும் கேட்க அரம்பித்து விட்டதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











