காசுக்காக அதை பண்றேனா?.. தனுஷ் ஏதாவது பண்ணா சொல்லுன்னு சொன்னாங்க.. சாய் பல்லவி பளிச் பேட்டி!

சென்னை: த்ரிஷாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் பிறந்து மிகப்பெரிய நடிகையாக மாறியுள்ளார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தில் அவரது மனைவியாக நடித்துள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியளித்து வருகிறார் சாய் பல்லவி.

பணத்தாசை பிடித்தவள், ஓவர் ஆட்டிட்யூட் போன்ற சில கமெண்ட்டுகள் என்னை பற்றி எழுந்ததை பார்த்து ஷாக் ஆகியிருக்கேன். யாருடைய மனமும் ஹர்ட் ஆகிடக் கூடாது என நினைப்பவள் நான். ரொம்ப ஆட்டிட்யூட் எல்லாம் கிடையாது என மனம் திறந்து பேசியுள்ளார் சாய் பல்லவி.

amaran sai pallavi dhanush

மேலும், தனுஷ் உடன் நடித்தது குறித்தும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரம் குறித்தும் பல விஷயங்களை படபடவென தனது ஸ்டைலில் ஷேர் செய்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

காசுக்காக நடிக்கல: கால்ஷீட் தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றால் கூடுதல் சம்பளம் கேட்கிறார் சாய் பல்லவி என்பது போல சில பத்திரிகைகள் என்னை பற்றி எழுதியதை பார்த்து ஷாக் ஆனேன். காசுக்காகத்தான் நடிக்கணும்னா 100 படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டு அதன் பின்னர், நடிக்காமல் சென்றிருப்பேன் என்றார். நடிப்பது பிடிச்சிருக்கு, அதில் கிடைக்கும் அங்கீகாரமும் நம்ம வீட்டுப் பெண்ணின் படம் ரிலீஸ் ஆகிறது என சொல்லும் அன்பும் தான் தொடர்ந்து நல்ல படங்களை பண்ண வேண்டும் என்கிற முனைப்பை கொடுக்கிறது என சாய் பல்லவி ஓபனாக கூறியுள்ளார்.

தனுஷ் பற்றி பேசிய சாய் பல்லவி: செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, தனுஷ் உடன் மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்த போது, தனுஷ் ஏதாவது பண்ணா என்கிட்ட சொல்லு, நான் கேட்கிறேன்னு செல்வா சார் சொல்வார். செல்வா சார் ரொம்ப டார்ச்சர் பண்ணா என்கிட்ட சொல்லுங்கன்னு தனுஷ் சொல்வார். ஆனால், அண்ணன் தம்பி ரெண்டு பேருமே அவங்களுக்கு கஷ்டமான சீன் கொடுக்கணும், கஷ்டமான வசனம் கொடுக்கணும்னு போட்டு படுத்தி எடுத்துட்டாங்க. ஆனால், இருவருமே பக்கா புரொபசனலிஸ்ட் என இருவர் குறித்தும் பேசியுள்ளார் சாய் பல்லவி.

amaran sai pallavi dhanush

நான் தான் காமெடி பீஸ்: டாக்டருக்கு படிச்சாலும் யாருக்கும் மருந்துக் கொடுக்க மாட்டேன். உடம்பே அதுவே தன்னை ஹீல் பண்ணிக்கும் அது வரைக்கும் வெயிட் பண்ண சொல்வேன். ஒருமுறை மஞ்சள் பயன்படுத்தி காயத்துக்கு மருந்துப் போட்ட போது இவ டாக்டர் இல்லை பாட்டி வைத்தியம் பண்றா என என்னை வைத்தே காமெடி செய்து விடுவார்கள் என சாய் பல்லவி கூறியுள்ளார்.

பிக் பாஸுக்கு வரல: வரும் தீபாவளிக்கு கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சோலோவாக சென்று இருந்தார். தனிப்பட்ட முறையில் நடிகை சாய் பல்லவி பேட்டியளித்து அந்த படத்தை புரமோட் செய்து வருகிறார். மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளார் என டீசர் மற்றும் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் டிரெய்லரில் சாய் பல்லவியின் பெயர் தான் சிவகார்த்திகேயன் பெயருக்கு முன்னதாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X