நீ அவரைத்தான் திருமணம் செய்யணும்.. கண்டிஷன் போட்ட அப்பா.. ஸ்ட்ரிக்ட்டாக நோ சொன்ன சாய் பல்லவி
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அக்டோபர் 31ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது.
நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் சாய் பல்லவி. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது. இதற்கிடையே அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் மருத்துவமும் படித்திருக்கிறார்.

மலர் டீச்சர்: இதனையடுத்து பிரேமம் படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
எதார்த்த அழகு: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.
அடுத்தடுத்த படங்கள்: அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ராமாயணா என பிஸியான நடிகையாக வலம்வருகிறார். ராமாயணா படத்தில் சீதை ரோலில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. தமிழ், மலையாளம், தெலுங்கில் எப்படி அவர் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றாரோ அதேபோல் ஹிந்தியிலும் பெறவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
திருமணம் பற்றி: இந்நிலையில் சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில் தனது திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதுகுறித்து அவர் பேசுகையில், "நான் வயதுக்கு வந்தவுடன், நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். எனது கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டால் நல்லது, கெட்டதுக்கு அழைக்கமாட்டார்கள்.
அதெல்லாம் முடியாது: நான் சினிமாவுக்கு வந்த சில காலம் கழித்து எனது அப்பா என்னிடம் வந்தார். அப்போது, நீ படுகர் இனத்தில் இருப்பவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இது கலாசாரத்தை பற்றியது என்று சொன்னார். ஆனால் அவர் ஒரு அப்பாவி. உடனே நான் அவரிடம், உங்கள் கலாசாரத்துக்காக நீங்கள் விரும்புவதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. அது ரொம்பவே தவறு என்றேன்" என கூறினார். முன்னதாக சமீபத்தில்தான் சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











