இரவு 9 மணிக்கு மேல் என்னால் முடியாது.. அந்தப் பழக்கம் ஏன் என தெரியல.. சாய் பல்லவி ஓபன் டாக்

சென்னை: சாய் பல்லவி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்துவருகின்றன. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுவருமந்தப் படங்கள் பல்லவிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது. தற்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கும் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தின் மெகா வெற்றியாலும், சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பாலும் முதல் படத்திலேயே வெகுவாக கவனம் ஈர்த்தார் அவர். அதன்படி மலையாளத்தில் தொடர்ந்து நடித்துவந்த அவர் தமிழில் மாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் ரவுடி பேபி பாடலும் சாய் பல்லவியின் நடிப்பும் பட்டித்தொட்டியெங்கும் பேசப்பட்டது. இதன் காரணமாக கோலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Sai Pallavi Talks about Her Routine Life Style At Latest Interview

தமிழில் பிஸி: அதன்படி சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கியிருந்த அந்தப் படமும் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வழக்கம் போல் சாய் பல்லவிக்கு சூப்பர் பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தமிழிலும் அவர் பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். அதேசமயம் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார் அவர்.

அமரன் பல்லவி: இப்படிப்பட்ட சூழலில்தான் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு அவ்வளவு அபாரமாக இருந்தது. ஒட்டுமொத்த படத்தையும் அவர்தான் தாங்கியிருந்தார் என்றும்; அவரை மட்டும் படத்திலிருந்து எடுத்துவிட்டால் படம் இவ்வளவு ஹிட்டாகியிருக்காது என்றும் ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த தண்டேல் படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக சக்கைப்போடு போட்டது.

Sai Pallavi Talks about Her Routine Life Style At Latest Interview

இந்திய அளவில் பிரபலம்: தமிழ், தெலுங்கில் வரிசையாக அவர் ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது ஹிந்திக்கும் சென்றிருக்கிறார் அவர். அதன்படி ராமாயணா படத்தில் சீதையாக நடிக்கிறார். தென்னிந்திய திரைத்துறையில் பல்லவி எப்படி ஒரு கலக்கு கலக்குகிறாரோ அதேபோல் ஹிந்தியிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டு; பாலிவுட்டி வென்ற தமிழ் நடிகைகள் லிஸ்ட்டில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று அவரது ரசிகர்கள் உறுதியோடு கூற ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

சாய் பல்லவியின் பேட்டி: இந்நிலையில் சாய் பல்லவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், " இரவு ஒன்பது மணிக்கு தூங்கி காலை நான்கு மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் எனக்கு இருக்கிறது. நான்கு மணிக்கே நான் ஏன் எழுந்துவிடுகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் நான் படிப்பு, வேலை என செய்ய ஆரம்பித்தபோது இந்தப் பழக்கம் எனக்குள் வர தொடங்கியது. நான் ஜார்ஜியாவில் படித்துக்கொண்டிருக்கும்போது அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

உடலுக்கு பழகிவிட்டது: அதன் காரணமாக இந்தப் பழக்கம் எனக்கு பழகிவிட்டது. கல்லூரி முடிந்து நான் வீட்டில் ஓய்வில் இருந்தாலும் இரவு 9 மணிக்கு தூங்கி காலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவேன். அதற்கு மேல் நானே தூங்க முயற்சித்தாலும் எனக்கு தூக்கம் வராது. அதன் காரணமாக தினசரி அதிகாலை 4 மணியிலிருந்தே எனது வேலைகளை நான் செய்ய தொடங்கிவிடுகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X