அப்படி மட்டும் செஞ்சுடாதீங்க.. அமரன் பட இயக்குநரிடம் சத்தியம் வாங்கிய சாய் பல்லவி.. மேடம் உஷார்தான்

சென்னை: பிரேமம் படத்தில் அறிமுகமான நடிகை சாய் பல்லவி வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். க்யூட்டான எக்ஸ்பிரெஷன், சிறந்த நடிப்பு, அளவான அழகு என அவர் தனக்கான பாதையில் சிறப்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் நாளை அமரன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷனில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர் சாய் பல்லவி. நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானார். அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக மலர் டீச்சராக சாய் பல்லவி தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவரைப் பார்த்த பலரும் இந்த நடிகைக்கு இதுவா முதல் படம் என்று ஆச்சரியம்தான் பட்டார்கள். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இருந்தது.

amaran sai pallavi sivakarthikeyan

சிறந்த டான்ஸர்: சாய் பல்லவி சிறந்த நடிகை என்பது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த டான்ஸரும்கூட. விஜய் டிவியில் நடந்த நடனம் தொடர்பான ஒரு ரியாலிட்டி ஷோவில்கூட அவர் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால் அந்தப் ஷோவில் அவர் டைட்டில் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலம் எப்படியோ அவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டது. ரியாலிட்டி ஷோவில் கிடைக்காத பிரபல்யம் சாய் பல்லவிக்கு சினிமாவின் மூலம் கிடைத்துவிட்டது. அதற்கு பல்லவியின் திறமைதான் முதல் காரணம்.

போலிகளை உடைத்த நாயகி: அதேபோல் சாய் பல்லவியிடம் இன்னொரு ஸ்பெஷலாக ரசிகர்கள் பார்ப்பது அவரது எதார்த்ததைத்தான். பொதுவாக நடிகைகள் பெரும்பாலானோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ஓவர் மேக்கப்போட்டு வருவார்கள். ஆனால் சாய் பல்லவியோ மேக்கப்பை அளவாக போட்டுக்கொண்டு அழகாக வருவார். அதனாலேயே பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.


வரிசையாக வாய்ப்புகள்: மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி; அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட நாட்கள் கழித்து தனது நடிப்பில் தமிழில் ஒரு படம் வெளியாவதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார் அவர். அமரன் ட்ரெய்லரிலும் சாய் பல்லவியின் நடிப்புக்கு வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

சாய் பல்லவி வாங்கிய சத்தியம்: இந்நிலையில் அமரன் படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அவர், “பயோபிக் படம் நீளமாக இருந்தது என்றால் ஹீரோயின் வரும் காட்சியைத்தான் வெட்டிவிடுவார்கள். எனவே அப்படி எதுவும் இந்தப் படத்தில் எனக்கு செய்யக்கூடாது என்று இயக்குநர் ராஜ்க்மார் பெரியசாமியிடம் சத்தியம் வாங்கிக்கொண்டேன். அவரும் அப்படி எதுவும் நடக்காது என்று கூறினார். மேலும் உங்கள் கதாபாத்திரமான இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரமும் முகுந்த் வரதராஜன் போன்றே முக்கியமானது என்று சொன்னார். அதற்கு பிறகு இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி செம உஷாராக இருந்திருக்காங்க என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X