»   »  சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!

சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: கொச்சி டைம்ஸின் 2016ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக சாய் பல்லவி தேர்வாகியுள்ளார்.

கொச்சி டைம்ஸ் 2016ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர், நடிககை குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்றுள்ள நடிகை சாய் பல்லவி, நடிகர் டொவினோ தாமஸ்.

பிரேமம் என்ற ஒரே படம் மூலம் பிரபலம் ஆனவர் சாய் பல்லவி.

சாய் பல்லவி

சாய் பல்லவி

முகம் நிறைய மேக்கப், ஒரு பரு வந்தால் டென்ஷனாகி அதை மறைக்க படாதபாடு படுவது, தலைமுடியை ஸ்டெர்ய்டனிங் செய்வது என்று இருப்போருக்கு மத்தியில் மேக்கப்பில்லாமல் பருவோடு, சுருட்டை முடியோடு இயற்கையாக வரும் சாய் பல்லவியை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மிகவும் விரும்பப்படும் நடிகையா என்பது தெரியவில்லை. நான் மலையாளத்தில் வெறும் இரண்டு படங்களே நடித்துள்ளேன். இருப்பினும் என்னை தேர்வு செய்த ரசிகர்கள் மிகவும் இனிமையானவர்கள் என்கிறார் சாய் பல்லவி.

பிரேமம்

பிரேமம்

பிரேமம் படத்தில் நான் நடித்தேன். ஆனால் அதுவரை எனக்கு நடிக்கத் தெரியுமா என்று கூட தெரியாது. என்னால் நடிக்க முடியும் என தற்போதும் என்னால் நம்ப முடியவில்லை என சாய் பல்லவி கூறியுள்ளார்.

யோகா

யோகா

நான் சுத்த சைவம். உடல் எடை அதிகரிக்கும் போது எல்லாம் யோகா செய்வேன். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தினமும் தியானம் செய்வேன். கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு ஒரு காய்ச்சல் கூட வரவில்லை. இது தியானத்தால் தான் சாத்தியம் என்பேன் என பல்லவி தெரிவித்துள்ளார்.

English summary
Tamil girl Sai Pallavi is selected as Kochi Times most desirable woman of the year 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil