ரூ. 2 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

By Siva

Recommended Video

Actress Sai Pallavi: ரூ. 2 கோடி விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம் சாய் பல்லவி- வீடியோ

சென்னை: ரூ. 2 கோடி விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம் சாய் பல்லவி.

பிரேமம் படம் மூலம் பிரபலமான சாய் பல்லவியை ஒரு வழியாக கோலிவுட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். அவர் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அவரை தேடி பெரிய விளம்பர வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

சாய் பல்லவி இயற்கையாகவே சிவப்பானவர். அவரின் கன்னங்கள் கூடுதல் சிவப்பாக இருப்பது தனி அழகு. இந்நிலையில் அவரை சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளனர். உடனே அவர் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.

ரூ. 2 கோடி

ரூ. 2 கோடி

மேடம் நீங்க நடிக்க ஒப்புக் கொண்டால் ரூ. 2 கோடி சம்பளம் தருகிறோம் என்றதாம் விளம்பர நிறுவனம். எத்தனை கோடி கொடுத்தாலும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம் சாய் பல்லவி. இயற்கை அழகே அழகு என்று நம்புபவர் அவர்.

பரு

பரு

சாய் பல்லவி தான் நடிக்கும் படங்களில் மேக்கப் போடுவது இல்லை. மேலும் பருக்களை மறைக்கவும் அவர் முயற்சி செய்யவில்லை. மாறாக பருவும் அழகு தான் என்பதை புரிய வைத்துவிட்டார். அப்படிப்பட்டவரிடம் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்கச் சொன்னது தவறு.

விளம்பரம்

விளம்பரம்

சாய் பல்லவி ரூ. 2 கோடி விளம்பர படத்தில் நடிக்க மறுத்தது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அவரின் முடிவு குறித்து அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர். சாய் பல்லவி மட்டும் அல்ல ஒரு சில நடிகைகளும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். கருப்பும் ஓர் அழகு என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X