பாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படும் ரவுடி பேபி... ஆனா அது ரொம்ப முக்கியமாம்!
சென்னை: நடிகை சாய் பல்லவி பாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
மருத்துவரான நடிகை சாய் பல்லவி, சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்தார். தமிழில் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார் சாய் பல்லவி.
இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் ஹிட்டானது.

தமிழில் தியா மூலம்
இதையடுத்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் வருண் தேஜ்க்கு ஜோடியாக ஃபிடா என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் செம ஹிட்டானது. தமிழில் ஏஎல் விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ரவுடி பேபி பாடல் சாதனை
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக உள்ளார் நடிகை சாய் பல்லவி. மாரி 2 படத்தில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பல மில்லியன் வியூஸ்களையும் குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தது.

ஷ்யாம் சிங்க ராய்..
இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் லவ் ஸ்டோரி படம் வெளியானது. இந்தப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து சாய் பல்லவி நானியுடன் இணைந்து நடித்த ஷ்யாம் சிங்க ராய் படம் சமீபத்தில் வெளியானது.

பாலிவுட்டில் நடிக்க விருப்பம்
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் நானியுடன் சேர்ந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. அந்த பேட்டியில் தனது பாலிவுட் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சாய் பல்லவி. பாலிவுட் படத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருந்தாலும் ஸ்க்ரிப்ட்டும் கதையும் ரொம்ப முக்கியம் என்றும் கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.


Click it and Unblock the Notifications











