என் பேரை முழுசா சொல்ல மாட்டியா?.. கூல் சுரேஷ் மேடையில் மாலை போட்ட தொகுப்பாளினியை விளாசிய இளம் நடிகை!
சென்னை: பயமறியா பிரம்மை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த படத்தின் ஹீரோயின் சாய் பிரியங்கா ரூத் தனது பெயரை தொகுப்பாளினி ஐஸ்வர்யா சரியாக சொல்லவில்லை என அவரிடம் கேட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
மெட்ரோ, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், இரவின் நிழல் என சில படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை சாய் பிரியங்கா ரூத். சோஷியல் மீடியாவில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டாகி வரும் இவர், அடுத்ததாக பயமறியா பிரம்மை படத்தில் நடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் இவரது பெயரை முழுமையாக தொகுப்பாளினி ஏன் கூறவில்லை என மைக்கை பிடித்து பேசுவதற்கு முன் தொகுப்பாளினியை பார்த்து கேட்ட நடிகை அதற்கான விளக்கத்தையும் கூறினார்.
பயமறியா பிரம்மை: பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். இந்த ஆண்டும் சில இயக்குநர்களின் படங்கள் பேசு பொருளாக மாறியுள்ளது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக பயமறியா பிரம்மை என வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஜேடி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் சாய் பிரியங்கா ரூத் நடித்துள்ளார். மேலும், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கே இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரூத்தை விட்டுட்ட: பயமறியா பிரம்மை படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை சாய் பிரியங்கா ரூத்தை மேடைக்கு பேச அழைத்த போது தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி நடிகை சாய் பிரியங்காவை மேடைக்கு அழைக்கிறேன். அவர் படத்தில் நடித்த அந்த கன் ஷாட் கண்ணுக்குள்ளே நிக்குது என ரொம்பவே பில்டப் செய்தார். மைக் அருகே வந்த நடிகை என் முழு பெயரை ஏன் சொல்லல என்றும் சாய் பிரியங்கா ரூத் தான் தனது முழு பெயர் என்றும் ரூத் தான் தனது பெயர் என்றும் அவரிடம் லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்பாவோட எக்ஸ் பெயர்: மேலும், ரூத் என்பது தனது அப்பாவோட எக்ஸ் காதலியின் பெயர் என்றும் அதைத்தான் தனக்கு வைத்துள்ளார். அதை போய் சொல்லாமல் விட்டுட்டீயே என ஐஸ்வர்யா ரகுபதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஏற்கனவே இசை வெளியீட்டு விழா ஒன்றில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு கூல் சுரேஷ் மாலை போட்டது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











