சைப்-கரீனா திருமணம் தள்ளிவைப்பு?

By Siva

பாலிவுட் நடிகர் சைப் அலி கான், கரீனா கபூர் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர்கள் 2013ம் ஆண்டில் தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.

பாலிவுட்டில் நீண்ட, நீண்ட காலமாக காதலர்களாகவே வலம் வருபவர்கள் கரீனா கபூர், சைப் அலி கான். அவர்கள் எப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நடிகர்கள் முதல் அனைவரும் எதிர்பார்த்தனர். ஒரு வகையாக வரும் 10ம் தேதி நிச்சயதார்த்தமும், வரும் மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

அண்மையில் நடிகை ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் நடந்தது. அதையடுத்து சைப்ரீனா திருமணம் என்று பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அது எல்லாம் தற்போது பொய்யாய் போய்விடும் போன்று.

தி்ருமணத் தேதி பற்றி செய்திகள் வந்தாலும் சைபும், கரீனாவும் எதுவும் வாய்திறக்கவில்லை. சைபை கேட்டால் என்னுடைய ஏஜெண்ட் வினோத் படம் ரீலீஸாகவிருக்கிறது. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறேன். மற்றதெல்லாம் அப்புறம் தான் என்கிறார். அதன் பிறகு காக்டைல், கோ கோவா கான் மற்றும் ரேஸ் 2 ஆகிய படங்களில் நடிக்கப் போகிறாராமப்பா.

சரி மணமகன் தான் இப்படி என்று பார்த்தால் மணமகள் கரீனாவோ இந்த ஆண்டு முழுவதும் நடித்துக் கொண்டே இருக்கப் போகிறாராம். அதனால் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சே இல்லையாம். அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X