சாய் பல்லவிக்கு அடித்த ஜாக்பாட்…டாப் ஹீரோவுக்கு ஜோடியாகிறார்... அப்போ கல்யாணம்னு சொன்னது !
சென்னை : பிரபல பான் இந்தியா ஹீரோ ஜோடியாக, சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள விராட பருவம் படத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளது.

சாய் பல்லவி
தமிழில் தனுஷ் மற்றும் சூர்யாவின் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்களெல்லாம் தோல்வியை தழுவியதால் தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார். சாய் பல்லவிக்கு தெலுங்கில் தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் அங்கு ராசியான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.

டாப் நடிகை
தற்போது அம்மணி தெலுங்கில் டாப் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சாய் பல்லவி.

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, ஜூனியர் என்.டி.ஆர், அடுத்து கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். பான் இந்தியா முறையில் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இதில் நாயகியாக இந்தி நடிகை ஆலியா பட் ஒப்பந்தமானார். அவருக்குத் திருமணமானதால், திடீரென விலகினார். இதையடுத்து, ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுடன்
சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ள SK21 என்ற படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை ரங்கூன் படப்புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video

அப்போ கல்யாணம் இல்லையா
இந்த தகவல்களை கேள்விப்பட்ட ரசிகர்கள் சாய் பல்லவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதனால் தான் அவர் படங்களில் கமிட்டாகவில்லை என்று வதந்திகள். பரவின தற்போது அந்த வதந்திகளுக்கு சாய் பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











