»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மலையாளத்து நடிகர்களின் திரைமறைவு வேலைகள் காரணமாக ஷகீலாவின், கடை மூடப் பட்டு விட்டது, இப்போது அங்கு ஷகீலாவுக்கு நோ சான்ஸ்!.

வெறுத்துப் போன ஷகீலா, தனது கலைச் சேவையை தமிழ்த் திரையுலகிற்கு விரிவுபடுத்தியுள்ளார்.

ஷகீலா சென்று விட்டதால், பல மலையாள நடிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஷகீலாவின் அலம்பலான படங்களால், இவர்கள் நடித்த பல நல்லபடங்கள் கூட மண்ணைக் கவ்வி வந்தன. இதனால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கடிவாளம் போட்டுஷகீலாவை காலி செய்தனர் முன்னணி ஹீரோக்களான மம்மூட்டியும் மோகன்லாலும்.

ஷகீலா போய் விட்டதால் இனி நம்ம இஷ்டத்துக்கு நடிக்கலாம் என்று தெகிரியமாக இருந்த இவர்களது பொழப்பில் மண்ணைப் போட வந்துள்ளார் ஷஜினி.

5 ஷகீலாக்களின் கவர்ச்சியை இவர் ஒருவரே வைத்துள்ளாராம். உடம்பும் ஷகீலாவையே தூக்கி சாப்பிடுகிறதாம். காந்தமென கவர்ந்திழுக்கும்கண்கள், கண்டவுடன் பயமுறுத்தும் உயரம் என அரேபியக் குதிரையாக அட்டகாசம் செய்ய களத்தில் இறங்கியுள்ளாராம் ஷஜினி.

வாணிபம் என்ற படத்தில் நடித்து வரும் இந்த கவர்ச்சி எரிமலை கண்டபடி வெடித்துச் சிதறியுள்ளதாம். அவருடன்மரியா என்ற கவர்ச்சி கனலும் களம் புகுந்து, கலக்கியிருக்கிறதாம். ஷகீலாவின் இடத்தை நிரப்ப ஷஜினியிால்மட்டுமே முடியும் என்று திட்டவட்டமாக நம்புகிறார்களாம் ஷகீலாவைப் போட்டு பல பலான படங்கள் எடுத்ததயாரிப்பாளர்கள்.

பல தமிழ் படங்களிலும் குட்டி ரோல்களில் வந்து கவரிசி காட்டியவர் தான் இந்த ஷஜனி.

ஷகீலா இல்லங்கில் ஷஜினி, அல்லே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil