Don't Miss!
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- News
7 பேர் மட்டும் தான் தமிழர்களா? பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்!
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்த்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய மெர்சிடஸ் சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. பெற்றோருடன் முதல் ரைடு போன சாக்ஷி அகர்வால்!
சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால் புதிதாக விலை உயர்ந்த சொகுசு காரான மெர்சிடஸ் காரை வாங்கி உள்ளார்.
தனது பெற்றோர்களுடன் மெர்சிடஸ் இ கிளாஸ் ரக காரை வாங்கிய சாக்ஷி அகர்வால் அவர்களுடன் தனது முதல் ரைடு போயுள்ளார்.
தற்போது வலைதளங்களில் அதன் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. நடிகை சாக்ஷி அகர்வாலை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
வளைந்து, நெளிந்து யோகா செய்யும் சிம்பு பட நடிகை.. இத நாங்க எதிர்பாக்கவே இல்ல!

மெர்சிடஸ் கார் வாங்கிய சாக்ஷி
ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். டெடி, சிண்ட்ரல்லா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய சாக்ஷி அகர்வால் தற்போது புதிதாக விலை உயர்ந்த சொகுசு காரான மெர்சிடஸ் நியூ இ - கிளாஸ் ரக காரை வாங்கி உள்ளார்.

சந்தோஷத்தில் சாக்ஷி
சினிமாவில் படிப்படியாக உயர்ந்து ஹீரோயின் அந்தஸ்த்தை அடைந்துள்ள நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக மெர்சிடஸ் கார் வாங்கி உள்ள நிலையில், செம சந்தோஷத்துடன் அந்த காரின் அருகே நின்றபடியும், காருக்குள் அமர்ந்தபடியும் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

கார் ஓட்டும் அப்பா
தனது பெற்றோர்களுடன் அந்த சொகுசு காரை வாங்கிய சாக்ஷி அகர்வால் முதன் முதலாக தனது தந்தையையே மெர்சிடஸ் கார் ஓட்ட வைத்து அழகு பார்த்துள்ளார். அதன் புகைப்படங்களும் தற்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. புதிதாக சொகுசு கார் வாங்கிய சாக்ஷியை ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

மெர்சிடஸ் இ கிளாஸ் விலை
மணிக்கு 240 முதல் 250 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய இந்த மெர்சிடஸ் இ கிளாஸ் காரின் விலை 65 லட்சம் முதல் 85 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. 6.1 முதல் 7.6 நொடிகளிலேயே இந்த கார் டாப் ஸ்பீடை எட்டும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது. 1950 முதல் 2925 சிசி திறன் கொண்டது இந்த சொகுசு கார் என குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் இளவரசி
சினிமா படங்களை விட இன்ஸ்டாகிராமில் சாக்ஷி அகர்வால் அடிக்கடி பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களால் தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.